A Momentous Milestone— Apollo Cancer Centre’s Journey of Redefining Cancer Care and Instilling Hope for 30 Years
● First private oncology centre in India to celebrate the milestone of 30 years since inception, enabling over 7 lakh patients to ‘Win Over Cancer’
● ACC also celebrated World Rose Day to embrace the spirit of compassion, hope, and unity in the fight against cancer
Chennai, September 21st, 2023 – Apollo Cancer Centre (ACC) Chennai celebrated 30 years of unwavering commitment to excellence in cancer care and World Rose Day, with a special evening get-together as a tribute to the cancer warriors who have triumphed over cancer. On this momentous occasion, ACC reflects on its remarkable journey, highlighting numerous clinical and infrastructural milestones that have set new standards in cancer care.
Since its inception in 1993, Apollo Cancer Centre has consistently expanded its reach to serve patients across diverse geographical regions, ensuring access to world-class cancer care. With a pioneering spirit, ACC has dedicated itself to providing patient-centric care, focusing not only on treating cancer but also on enhancing the overall well-being of patients. One of the hallmarks of ACC’s journey has been its collaborations with leading international institutions, nurturing knowledge exchange and ensuring that patients have access to cutting-edge treatment and therapies. These partnerships have played a pivotal role in ACC’s mission to continually improve and innovate in the field of oncology.
Commenting on the 30-year milestone of Apollo Cancer Centre in Chennai, Dr. Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Enterprises Ltd, emphasized, “Apollo Cancer Centre in Chennai was our first standalone cancer hospital and over the past three decades, we dedicated ourselves not only to achieving remarkable clinical and infrastructural milestones but, more importantly, to fostering a profound culture of empathy, innovation, and global cooperation. Our unwavering commitment has always been to offer all-encompassing, patient-centred care that goes far beyond medical intervention, touching the lives of our cherished patients and their families. Apollo Cancer Centre’s legacy is one of hope, healing, and a steadfast promise of a brighter tomorrow. We’re excited about the ongoing journey that lies ahead, as we walk hand in hand with those we serve.”

Mr Harshad Reddy, Director – Group Oncology & International, Apollo Hospitals Enterprise Ltd, said, “Our celebration, coinciding with World Rose Day, marks three decades of unwavering dedication in the field of cancer care. These 30 years have been a testament to our profound commitment to nurturing hope, resilience, and the remarkable strength that enables individuals to conquer adversity. In this moment, we take great pride in cherishing the indomitable spirit of our patients and the countless triumphant stories that inspire us daily. Looking ahead, we’re determined to expand our reach and enhance cancer care globally through revolutionary technology and unwavering empathy.”
Moderated by a renowned actress, Priya Bhavani Shankar, the evening gathering featured a panel discussion with ‘Cancer Winners’. The discussion revolved around the patients’ experience of ‘Winning Over Cancer,’ life post-cancer, breaking social taboos, and inspiring those confronting similar challenges. Cancer survivors from Japan and India shared their experiences, fostering a sense of global unity.
Ms Priya Bhavani Shankar, actress, said, “It’s an absolute privilege to be part of this incredible celebration of Apollo Cancer Centre’s 30-year journey. The stories of cancer winners and their remarkable journeys are not only inspiring but they also prove the indomitable human spirit. This event is a beautiful fusion of courage, hope, and the power to break societal taboos surrounding cancer. I’m honoured to be part of this event, to moderate a discussion that showcases resilience and strength, and to witness the incredible work that Apollo Cancer Centre is doing in the fight against cancer.”
ACC also organized a ‘Dine with Doctor’ session to facilitate patient-consultant bonding and enhanced the evening with entertainment, such as a ramp walk and song and dance performances by young ‘Cancer Winners.’
ACC’s 30-year anniversary celebration underscored the importance of both internal and external stakeholders who have been instrumental in shaping the institution’s progress. It was a tribute to the enduring spirit of ACC in “Winning Over Cancer” and its ongoing dedication to improving the lives of cancer patients.

WinningOverCancer

About Apollo Cancer Centre – https://apollocancerCentre.com/
THE CANCER CARE LEGACY: BREATHING HOPE INTO LIVES FOR OVER 30 YEARS
Cancer care today means 360-degree comprehensive care, which requires commitment, expertise and an indomitable spirit from cancer specialists.

Apollo Cancer Centre has a network across India with over 325 oncologists to oversee the delivery of high-end precision Oncology Therapy. Our oncologists deliver world-class cancer care following an organ-based practice under the competent Cancer Management Teams. This helps us in delivering exemplary treatment to the patient in an environment that has consistently delivered an international standard of clinical outcomes.

Today, people from 147 countries come to India for cancer treatment at Apollo Cancer Centre. With the first and only Pencil Beam Proton Therapy Centre in South Asia & Middle East, Apollo Cancer Centre has all that is needed to strengthen the battle against cancer.

புற்றுநோய் சிகிச்சையை மறுவரையறை செய்து நம்பிக்கையை பதிய வைக்கும் சிறப்பான செயற்பணியில் 30 ஆண்டுகள்!
அப்போலோ கேன்சர் சென்டரின் பெருமிதமான மைல்கல் நிகழ்வு!
● தொடங்கப்பட்டதிலிருந்து 7 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு புற்றுநோய் மீது வெற்றி காண்பதற்கான திறனை வழங்கும் பணியில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்தியாவின் முதல் தனியார் துறை புற்றுநோயியல் சிகிச்சை மையம் இதுவே.
● புற்றுநோய்க்கு எதிரான போரில் கருணை, மனிதநேயம், நம்பிக்கை மற்றும் ஒற்றுமை உணர்வின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் உலக ரோஜா தினம் (World Rose Day) என்பதையும் அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டாடியது.
சென்னை: செப்டம்பர் 21, 2023: புற்றுநோய்க்கு உயர்சிகிச்சை வழங்குவதில் தளராத அர்ப்பணிப்பு உணர்வுடன் 30 ஆண்டுகள் செயற்பணி நிறைவடைந்திருப்பதையும் மற்றும் அதனோடு சேர்த்து உலக ரோஜா தினத்தையும் சென்னையிலுள்ள அப்போலோ கேன்சர் சென்டர் (ACC) கொண்டாடியது. புற்றுநோயை சிகிச்சை மூலம் வென்ற சாதனையாளர்களை பாராட்டி, கௌரவிக்கும் விதத்தில் ஒரு மாலை நேர ஒன்றுகூடல் நிகழ்வை இதற்காக ACC நடத்தியது. புற்றுநோய் சிகிச்சையில் புதிய தரநிலைகளை உருவாக்கியிருக்கும் ACC, மருத்துவ சிகிச்சை மற்றும் உட்கட்டமைப்பு முன்னேற்றம் ஆகியவற்றில் பல மைல்கற்களை கடந்திருக்கும் தனது சிறப்பான பயணம் குறித்து இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நினைவுகூர்கிறது.
1993-ம் ஆண்டில் இது தொடங்கப்பட்டதிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு சேவையாற்ற, தனது செயற்பரப்பு எல்லையை தொடர்ந்து விரிவுபடுத்தி வந்திருக்கும் ACC, புற்றுநோய்க்கு உலகத்தரத்திலான சிகிச்சைக்கு அணுகுவசதி கிடைப்பதை உறுதி செய்திருக்கிறது. நோயாளியின் நலனை மையமாக கொண்ட சிகிச்சைப் பராமரிப்பை தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ACC, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது மீது மட்டுமின்றி, நோயாளிகளின் ஒட்டுமொத்த நலவாழ்வையும் மேம்படுத்துவது மீது சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. முன்னணி சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகள், அறிவு பரிமாற்ற செயல்பாடு ஆகியவை ACC – ன் பயணத்தில் சிறப்பான முத்திரை பதிக்கும் நடவடிக்கைகளுள் ஒன்றாகும். இதன்மூலம் மிக நவீன சிகிச்சையும், சிகிச்சை முறைகளும் நோயாளிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் தன்னை தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற ACC – ன் செயல்திட்டத்தில் இந்த கூட்டாண்மை நடவடிக்கைகள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணை தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி, சென்னையில் அப்போலோ கேன்சர் சென்டர் 30 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டியிருப்பது குறித்து கூறியதாவது: “சென்னையில் தொடங்கப்பட்ட அப்போலோ கேன்சர் சென்டர், புற்றுநோய்க்காக நாங்கள் தொடங்கிய முதல் தனிப்பட்ட மருத்துவமனையாகும். கடந்த மூன்று தசாப்த காலஅளவில் குறிப்பிடத்தக்க மருத்துவ மற்றும் உட்கட்டமைப்பு மைல்கற்களை நாங்கள் எட்டியிருக்கிறோம்; ஆனால், அதற்கும் மேல் மிக முக்கியமாக, புரிந்துணர்வு, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை அடங்கிய ஒரு வலுவான கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். மருத்துவ இடையீட்டு சிகிச்சை என்பதையும் கடந்து, நோயாளியின் நலனை மையமாக கொண்ட முழுமையான பராமரிப்பை வழங்குவது மீதே எங்களது பொறுப்புறுதியும், அர்ப்பணிப்பும் தளர்வின்றி இருந்து வருகின்றன. இதன்மூலம், இலட்சக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அப்போலோ கேன்சர் சென்டரின் பாரம்பரியம் என்பது, நம்பிக்கையையும், குணமாக்கலையும் மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஒரு வலுவான உறுதிமொழியையும் வழங்குவதாக இருக்கிறது. நாங்கள் சேவையாற்றும் சமூகத்தினரோடு, கைகோர்த்து இனிவரும் காலங்களிலும் நம்பிக்கையோடு மேற்கொள்ளும் பயணம் குறித்து நாங்கள் உற்சாகத்தோடு இருக்கிறோம்.” என்று கூறினார்.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் புற்றுநோயியல் மற்றும் இன்டர்நேஷனல் துறைக்கான குழும இயக்குனர் திரு. ஹர்ஷத் ரெட்டி இந்நிகழ்வில் கூறியதாவது: “உலக ரோஜா தினத்தோடு ஒருங்கிணைந்து அனுசரிக்கப்படும் எமது கொண்டாட்டம், புற்றுநோய் சிகிச்சை தளத்தில் தளராத அர்ப்பணிப்பும், சேவையும் நிரம்பிய 30 ஆண்டுகளின் சாதனையை நினைவூட்டுகிறது. பாதகமான எதிர்மறை நிகழ்வுகளையும், வெற்றிக்கான தனிநபர்களை ஏதுவாக்குகிறவாறு நம்பிக்கையையும், மீண்டெழும் திறனையும் மற்றும் மனஉறுதியையும் அவர்கள் மத்தியில் உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளில் எமது ஆழமான பொறுப்புறுதிக்கு இந்த 30 ஆண்டுகள் பணியானது, நேர்த்தியான சாட்சியமாக திகழ்கிறது. இத்தருணத்தில், எமது நோயாளிகளின் நம்பிக்கையையும், தைரியத்தையும் நினைவுகூர்வதில் நாங்கள் அதிகம் பெருமைப்படுகிறோம். எண்ணிலடங்காத வெற்றிக்கதைகள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உத்வேகமளிக்கின்றன. இனிவரும் காலத்தில், எமது செயற்பரப்பை விரிவாக்கி உலகளவில் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். புரட்சிகரமான தொழில்நுட்பம் மற்றும் கனிவான புரிந்துணர்வின் மூலம் இதை நாங்கள் சாதிப்போம்.” என்று கூறினார்.
பிரபல திரைப்பட நடிகை பிரியா பவானி சங்கர் தொகுத்து வழங்கிய இந்த மாலை நேர நிகழ்வில், புற்றுநோயை வென்ற சாதனையாளர்களுடன் ஒரு குழு விவாதமும் இடம்பெற்றது. புற்றுநோயை வென்றது குறித்து நோயாளிகளின் அனுபவம், புற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை, சமூகத்தில் நிலவும் தவறான எண்ணங்களை உடைத்தெறிவது மற்றும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்கு உத்வேகமளிப்பது என பல தலைப்புகளில் இந்த விவாதம் நடைபெற்றது. புற்றுநோயை வென்று சாதித்திருக்கின்ற ஜப்பான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல நபர்கள் தங்களது அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டனர்; புற்றுநோய்க்கு எதிரான போரில் உலகளாவிய ஒற்றுமை உணர்வை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்தது.
திரைப்பட நடிகை பிரியா பவானி சங்கர் இதுபற்றி பேசுகையில், “அப்போலோ கேன்சர் சென்டரின் 30 ஆண்டுகால பயணத்தின் ஒரு சிறப்பான கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பது எனக்கு கிடைத்திருக்கும் கௌரவம் என்றே நான் கருதுகிறேன். புற்றுநோயை வென்றவர்களது கதைகளும் மற்றும் அவர்களது நம்பிக்கை நிறைந்த பயணங்களும் உத்வேகம் அளிப்பவை. அதே நேரத்தில், கடும் பாதிப்பையும் புறந்தள்ளி, வெற்றி காண வேண்டுமென்ற மானுட உணர்வை நிரூபிப்பதாகவும் இப்பயணங்கள் இருக்கின்றன. தைரியம், நம்பிக்கை மற்றும் புற்றுநோய் குறித்து சமூகத்தில் நிலவும் தவறான கண்ணோட்டங்களை உடைக்கும் ஆற்றல் ஆகியவற்றின் அழகான கலவையாக இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பங்கேற்று, பாதிப்பிலிருந்து மீண்டெழும் திறனையும், மனஉறுதியையும் அழகாக வெளிப்படுத்திய ஒரு விவாத அமர்வை தொகுத்து வழங்கியதில் நான் பெருமை கொள்கிறேன். புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் அப்போலோ கேன்சர் சென்டர் செய்துவரும் வியக்கத்தக்க பணியையும், சேவையையும் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறினார்.
நோயாளி – மருத்துவருக்கு இடையிலான பிணைப்பையும், நம்பிக்கையையும் ஏதுவாக்க, ‘டைன் வித் டாக்டர்’ என்ற அமர்வையும் ACC நடத்தியது. மேடையில் ஒய்யார நடை மற்றும் புற்றுநோயை வென்ற இளம் வீரர்கள் வழங்கிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அடங்கிய கலை நிகழ்ச்சிகள் இந்த மாலைப்பொழுதை மேலும் இனிமையானதாக ஆக்கின.
இம்மருத்துவமனையின் முன்னேற்றத்தை சாத்தியமாக்குவதில் மிக முக்கிய பங்காற்றிய உள்ளார்ந்த மற்றும் வெளியார்ந்த அக்கறைப் பங்காளர்களின் முக்கியத்துவத்தையும், ACC -ன் 30 ஆண்டுகள் நிறைவுக்கான இக்கொண்டாட்டம், நினைவுகூர்ந்தது. புற்றுநோய் மீது வெற்றி காண்பதில் ACC – ன் நிலைப்புத்தன்மையுள்ள அர்ப்பணிப்பு உணர்விற்கும் மற்றும் புற்றுநோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அது தொடர்ந்து கொண்டிருக்கும் மனஉறுதிக்கும் இக்கொண்டாட்டம் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருந்தது.

புற்றுநோயை வெற்றி காண்பது

அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து– https://apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்:
30 ஆண்டுகளுக்கும் அதிகமாக மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம் இன்றைக்கு புற்றுநோய் சிகிச்சை என்பது 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 325-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேச தரத்தில் சிகிச்சை விளைவுகளைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இயங்கும் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான் தெரபி சென்டர் என்பதைக் கொண்டிருக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தை வலுவாக மேற்கொள்ள தேவைப்படும் அனைத்து வசதிகளையும், திறன்களையும் பெற்றிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here