ஜியோசினிமா செயலியின் ‘மேட்ச் சென்டர் லைவ்’ என்ற உரையாடலில், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்க் வாஹ், மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 1-வது ஒருநாள் போட்டியில் முகமது ஷமியின் செயல்திறன் (5/51) குறித்து கலந்துரையாடினார். அவர் கூறும்போது, “அவர் சரியான நீளத்தில் பந்துவீசினார். இதனால்தான் அவர் பேட்ஸ்மேன்களை கிரீஸில் ஆட்டமிழக்கச் செய்தார். அவர் வீசிய பந்துகள் ஷார்ட் பந்துகளாகவோ அல்லது ஃபுல் லெந்த் பந்துகளாகவோ இல்லை. எங்கு பந்துவீசினால் நகருமோ அந்த மிகச்சரியான நீளத்தில் பந்தை வீசினார். இதனால் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. முகமது ஷமி, எப்போதும் ஹாஃப் வாலி லெந்த் பந்துவீச்சில் மிரட்டுவார். நல்ல விளிம்பு நிலையில் அவர் பந்துகளை வீசினார். இதுபோன்ற ஆடுகளங்களில் நீங்கள் கவனித்து விளையாட வேண்டும்” என்றார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் ஜியோசினிமா நிபுணருமான அபிஷேக் நாயர், விளையாடும் லெவன் அணி குறித்தும், இந்திய பயிற்சியாளர் குழு எடுக்க வேண்டிய முடிவுகள், ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவரையும் ஒன்றாக இணைத்து விளையாட முடியுமா என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, “இது இருவருக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும். விக்கெட் எடுப்பதில் இந்த சிந்தனை செயல்முறை இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகளை எடுப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் இந்தியா ஒரு வலுவான ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் சீன் அபோட்டையும் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது.
எனவே, உங்களிடம் திறமையான பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது அது உங்களுக்குச் சொல்ல வருவது என்னவென்றால் விக்கெட்டுகளை எடுப்பதில், ஷர்துல் தாக்குரை அணியில் எடுக்க நினைக்கிறீர்களா அல்லது அங்கு நீங்கள் அந்த ஆல்-ரவுண்டரின் ஸ்லாட்டுடன் செல்ல நினைக்கிறீர்களா அல்லது ஒவ்வொரு ஆட்டத்திலும் விக்கெட்டை எடுக்கும் பவுலருடன் செல்ல நினைக்கிறீர்களா என்பதைத்தான்”என்றார்.
*செப்டம்பர் 24-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நேரடியாகவும், பிரத்யேகமாகவும் ஜியோசினிமாவில் 11 மொழிகளில் கண்டுகளியுங்கள். லீனியரிலும்/ ஆஃப்லைன் டிவியிலும் இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கலர்ஸ் தமிழ் (தமிழ்), ஸ்போர்ட்ஸ்18-1 எச்டி (இங்கிலிஷ்) உள்ளிட்ட தொலைக்காட்சிகளிலும் கண்டுகளியுங்கள்.