
இயக்குநர் சித்தின் இயக்கியுள்ள 60 நிமிட ஆவணப்படம் “கேம் ஆஃப் சேஞ்ச்” வெளியீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆவணப்படத்தை சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா இணைந்து தயாரித்துள்ளனர். வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற எட்டு தனிநபர்களின் நம்ப முடியாத கதைகளை விவரிக்கும் கதைகளை சார்ந்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

“கேம் ஆஃப் சேஞ்ச்” மனித குலத்தின் மீள்தன்மைக்கு சான்றாக செயல்படுவதை எடுத்துரைக்கும் வகையில், ஒவ்வொரு தனி நபரும் தங்களுக்கான சவால்களை கடந்து எப்படி தங்களது துறையில் சாதித்தனர் என்பதை காட்டுகிறது. இவர்களது பயணம் பார்வையாளர்களுக்கு உறுதி, நம்பிக்கையோடு தங்கள் கனவுகளை அடைய செய்யும் சக்தியை உணரச் செய்யும்.
அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கக்கூடிய நபர்களின் சாதனைகளை கொண்டாட எங்களுடன் இணையுங்கள். அவர்களின் கதைகள் மற்றும் அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தால் நெகிழ்ச்சி கொள்ளும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.
வெற்றி மற்றும் விடாமுயற்சியின் சாரத்தை மறுவரையறை செய்யும் அசாதாரண கதைகளை “கேம் ஆஃப் சேஞ்ச்”-ஐ பார்த்து அனுபவியுங்கள்.
கேம் ஆஃப் சேஞ்ச் படத்தில் சித்தார்த் ராஜசேகர், பாடகர் பிளேயர், சுரேன், டினாஸ், விஷால் சைனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தை ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள். சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.