விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம்

‘சாதி சனம்’, ‘காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

நெல்லை மாவட்ட பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள ‘உலகம்மை’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ரடிகர்கள் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர்,பிரணவ் அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ்,சாமி,ஜெயந்திஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர்இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் பிரகாஷ், தான் கல்லூரி நாட்களிலேயே சு சமுத்திரத்தின் கதைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.

“அதுவும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, அதை திரைப்படமாக எடுக்க நான் விரும்பினேன். என்று அவர் கூறினார்.

உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. மாரிமுத்து நாடார் மற்றும் பலவேச நாடார் உலகம்மை மற்றும் அவரது தந்தை மாயாண்டி நாடாரை பழிவாங்குகிறார்கள். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை படம் சித்தரிக்கிறது.

சமூக வாழ்வியல் திரைப்படமான உலகம்மையின் முக்கிய அம்சங்களில் இளையராஜா இசையமைத்த நான்கு பாடல்களும் பின்னணி இசையும் அடங்கும். பேராசிரியர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார், கே வி மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பாளராகவும்வீர சிங்கம் கலை இயக்குநராகவும் பங்காற்றியுள்ளனர்.

பாடல் வரிகளை இளையராஜா, முத்துலிங்கம், சரவணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.ஸ்ரீநிஷா. ஹரிசரண். சுகந்தி.வாசு மற்றும் பலர் பாடி உள்ளனர். இத்திரைப்படம் இன்று (22-09-2023) உலகமெங்கும் திரையிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here