தமிழ் படம்1 மற்றும் 2 ஆகி மிகப்பெரிய வெற்றிப்படங்களை இயக்கிய சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார். நந்திதா, ரம்யா நம்பிசன், நிழல்கள் ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ரத்தம். ஒளிப்பதிவு கோபி அமர்நாத், படத்தொகுப்பு டி.எஸ்.சுரேஷ். இன்ஃபினிட்டி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இசை கண்ணன் நாராயணன்.

புலனாய்வுப் பத்திரிகையாளராக பணியாற்றி, அதன் காரணமாக ஏற்பட்ட பகையால் மனைவியை இழந்ததால், பத்திரிக்கைத்துறையை விட்டு விலகி தன் மகளுடன் வாழ்ந்துவரும் விஜய் ஆண்டனி. தன் நண்பனின் இழப்பால் அவன் இடத்தை நிரப்புவதற்காக மீண்டும் அதே பத்திரிக்கை துறைக்கு வருகிறார். அதன் பிறகு தோண்டத்ததோண்ட வெளிவரும் பூதங்களை எப்படி கையாள்கிறார் என்பதே ரத்தம் படத்தின் கதை

பத்திரிக்கை துறை தொடர்பான கதை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் புதுமைகளை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். மனைவியை இழந்த சோகம், குடிக்கு அடிமையான நிலை, நண்பனின் கொலை குறித்த துப்பறிதல் என்று தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி. ரம்யா நம்பீசன், நந்திதா ஆகியோர் கதாபாத்திரங்கள் அழுத்தமாக இருக்கின்றன நடிப்பும் சிறப்பு, ஜெகன், ஜான் மகேந்திரன் என அனைவரும் கவனத்தை ஈர்க்கின்றனர்.

கண்ணன் நாராயணன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. ’ரத்தம் ரத்தம்’ பாடல் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு த்ரில்லர் படத்துக்கேற்ப அதகளப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் ரத்தம் மைண்ட் ப்ளோயின் புலனாய்வுப் படமாக வெளியாகியுள்ளது.

ரத்தம் – அதகளம்

Cast

Vijay Antony
Mahima Nambiar,
Nandita Swetha,
Ramya Nambeesan

Technical Crew
produced by Kamal Bohra, G.Dhananjayan, Pradeep B, and Pankaj Bohra of Infiniti Film Ventures
Music Director : Kannan Narayanan
D O P: Gopi Amarnath
Editor: T.S. Suresh
Stunts: Dhilip Subbarayan
Sound Designer: Vijay Rathinam MPSE
Sound Mix: A M Rahmathulla
Art: Senthil Raghavan
Writing Team : Athisha, Karkibava, Thozhar Aathi
DI : B2H Studios
Colorist: Selvam
VFX Supervisor : DALE VFX
Lyrics: Yuga Bharathi, Arivu, Uma Devi, K.Chandru
Costume Designer: Shimona Stalin
Publicity Design : Chandru – Thandora
Make Up : Hari Prasad
Stills : Mahesh Jayachandran
Telugu Dialogue & Lyrics : Bashashree
Production Executive: K.Sakthivel
Head Name : Maruthy Prasad
Executive Producer : Pradeep Subramaniam

ரத்தம் திரைப்பட விமர்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here