விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, விதார்த் ஆகியோர் நடிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் இறுகப்பற்று. பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் நிறுவத்தின் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன்.

கண்வன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் உளவியல் நிபுணரான ஷ்ரத்தா ஸ்ரீநாத், தனக்கும் தன் கணவரான விக்ரம் பிரபுவுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறார். அவர்கள் சந்திக்கும் தம்பதிகளுக்கிடையேயான பிரச்சினைகள் என முழு நீள குடும்ப படமாக வெளியாகி இருக்கிறது இறுகப்பற்று.

உறவுகளுக்கிடையே ஏற்படும் உளவியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இந்தப் படம் முழுக்க, இனிமை நிறைந்த உணர்வுகளுடன் இருப்பது சிறப்பு. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த் என அனைவரும் போட்டி போடு நடித்திருக்கின்றனர். மனோபாலா நடிப்பு மிகச்சிறப்பு, அதே நேரம் இவர் நம்முடன் இல்லை என்ற கவலையையும் ஏற்படுத்துகிறது.

உணார்வுப்பூர்வமன படத்தின் தன்மையை உணர்ந்து இசையமைத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் மிகமிகச்சிறப்பு. பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் ஐஸ்கிரீம் போல் இருக்கிறது.

இறுகப்பற்று உணர்வுப்பாலம்

இறுகப்பற்று திரைப்பட விமர்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here