‘Jigarthanda Double X’, a pan-Indian film directed by Karthik Subbaraj and produced by Stonebench Films, is set to hit the theaters worldwide on for Diwali. With exactly a month away for the big day, its first single launch and press meet was held today at Satyam Cinemas, Chennai.

‘Maamadura’, the first song from ‘Jigarthanda Double X’ was released online by music composer-turned-actor G V Prakash Kumar today at 12.12 pm. SJ Suryah, Raghava Lawrence, producer Karthikeyan Santhanam, and music director Santhosh Narayanan among others participated in the physical event.

Producer Karthikeyan Santhanam (Stonebench Films) said…

We are waiting for Diwali 2023 for the release of this movie. Thank you Kathiresan sir for giving me this stage. We wanted to meet you (press and media) exactly a month before the release and share information about ‘Jigarthanda Double X’. We have made this film at a huge cost. Thanks to Raghava Lawrence, S J Suryah sir, Director Karthik Subbaraj and all members of the crew. We hope this movie will be a huge hit. Watch this in theaters for Diwali and support us.

‘Jigarthanda’ won the National Award. We hope that ‘Jigarthanda Double X’ will also win the National Award. Editing and music will be pillars of this movie. I wouldn’t be here without my Stone Bench Films. Thanks to everyone who helped us.

Music composer Santhosh Narayanan said…

Everyone here said the single that was released today is a great song. We have made one such entire album. Do watch this movie in theatres. I get my own space when I do a film with Karthik Subbaraj. Karthik sir is my biggest supporter. I hope I have given good music. This movie has a special place in the list of my favorite films I have worked on. This flick will be different. Both SJ Suryah and Lawrence have acted well. There are huge expectations for this film. This is definitely a connect for you, thank you all.

Actor and director SJ Suryah said…

Hello everyone, We are handing over ‘Jigarthanda Double X’ to you press and media friends. The fim has content to reach audience across borders. I have seen the amount of anticipation a Karthik Subbaraj film can generate. Santhosh Narayanan, who does not speak much, has spoken a lot on this stage. This film has made him to speak so. Lawrence sir is a noble human being. It was a pleasure to work with him in this film. Karthik Subbaraj sir’s work and visuals are always extraordinary. God is sending good projects to me. ‘Iraivi’ is the biggest reason why I am a good actor here. I thank Karthik Subbaraj sir for that. There is much to talk about. We will definitely talk. This movie has taken shape very well.

Actor Raghava Lawrence said…

Greetings to all the journalists and friends who have come here, thanks to all my fans who love me without any expectations. I was supposed to act in ‘Jigarthanda’. Kathiresan and Karthik Subbaraj narrated its story. I was working on a Telugu film so I couldn’t do it. I was worried that I had missed it. ‘Jigarthanda Double X’ is the God-given opportunity to compensate it. I call those who teach me in life as Guru. I had worked in a film with Balachander sir. I call Superstar Rajini sir as Guru. Karthik Subbaraj is also a guru now. This movie is all about what he said. Karthik Subbaraj has made this movie very well. The team has constructed a road for people in the shooting location. This film will be a super hit just because of its team’s helping nature.

I am a big fan of Santhosh Narayanan. There is a lot to talk about this movie. It was a pleasure to act with SJ Suryah sir.

Director Karthik Subbaraj said…

Hello everyone, I am very happy to be on this stage. I hope this film will give me a big hit after ‘Petta’. I came to Satyam Theatre for the audio launch of ‘Pizza’. ‘Jigarthanda Double X’ gives me that kind of feeling now. Thanks to everyone who worked on this film. I won’t talk much about this movie. I hope you will talk about this story. Thanks to Stonbench Films and Kathiresan sir. As Santhosh Narayanan said, this film has come out very well. Thanks to our journalist friends. Please shower your support on us.”

A
KARTHIK SUBBARAJ
PADAM

A SANTHOSH NARAYANAN MUSICAL

DOP S THIRUNAVUKKARASU

EDITOR SHAFIQUE MOHAMED ALI

PRODUCTION DESIGNER T SANTANAM

STUNTS DHILIP SUBBBARAYAN

ART DIRECTOR BALASUBRAMANIAN, KUMAR GANGAPPAN

CHOREOGRAPHY SHERIF M, BABA BASKAR

SOUND DESIGNER KUNAL RAJAN

COSTUME DESIGNER PRAVEEN RAJA

MAKEUP VINOTH S

COSTUMER SUBIER

LYRICS VIVEK, MUTHAMIL R M S

STILLS M DINESH

VFX SUPERVISOR H MONESH

COLORIST RANGA

PUBLICITY DESIGNS TUNEY JOHN (24AM)

TEASER CUT ASHISH

SOUND MIX SUREN G

PRODUCTION CONTROLLER GANESH PS

PRODUCTION EXECUTIVES G DURAIMURUGAN

PRODUCTION COORDINATOR RAJKUMAR

PRODUCTION MANAGERS N SHANMUGA SUNDHARAM, RANGARAJ PERUMAL

EXECUTIVE PRODUCER ASHOK NARAYANAN M

ASSOCIATE PRODUCER PAVAN NARENDRA

CO PRODUCED BY KAL RAMAN, S SOMASEGAR, KALYAN SUBRAMANIAM

CO PRODUCED BY ALANKAR PANDIAN

DIRECTION TEAM SRINIVASAN, ANAND PURUSHOTH, KARTHIK VP, VIGNESWARAN, JAGADISH, ARVIND RAJU R, MAHES BALU, SOORAJ DAS, SAI, MURUGANANTHAM, RAGHUL M, AVINASH R, MOHAN KUMAR R

PRO NIKIL MURUKAN, VAMSI KAKA, EBRAHIM CONTRACTOR

PRODUCED BY
KAARTHEKEYAN SANTHANAM, S KATHIRESAN

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது.

‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’-யை இன்று மதியம் 12.12 மணிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் இணையத்தில் வெளியிட்டார். எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்) பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், இந்த திரைப்படத்தின் 2023 தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கிறோம். இந்த மேடையை தந்த கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் உங்களை சந்தித்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம். நிறைய செலவில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ராகவா லாரன்ஸ், எஸ்,ஜே. சூர்யா சார், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறோம். திரையரங்குகளில் இதை தீபாவளிக்கு பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டும்.

‘ஜிகர்தாண்டா 1’ தேசிய விருது வாங்கியது. ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’-ம் நேஷனல் அவார்ட் வாங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எடிட்டிங், இசை எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. என்னுடைய ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இல்லாமல் நான் இல்லை. எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், திகட்டாத பாடல் என்று இன்று வெளியிடப்பட்ட பாடலை சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆல்பமே பண்ணியிருக்கிறோம். இந்த திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் வந்து பாருங்கள். கார்த்திக் சுப்பராஜ் உடன் படம் பண்ணும் போது எனக்கு தனி ஸ்பேஸ் கிடைக்கிறது. கார்த்திக் சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவை அளிப்பவர். நல்ல இசை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்தவற்றில் இதற்கு தனி இடம் உண்டு. இந்த படம் வேறு மாதிரி இருக்கும். எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இது உங்களுக்கு கண்டிப்பாக கனெக்ட் ஆகும், நன்றி.

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம். எல்லைகளை தாண்டி ரசிகர்களை சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன். அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணன் அவர்களே இந்த மேடையில் நிறைய பேசியுள்ளார். இந்த படம் அவ்வளவு பேச வைத்துள்ளது. லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜ் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நிறைய பேச வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக பேசுவோம். இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…

வந்திருக்கும் பத்திரிக்கையாளர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் அன்பு செலுத்தும் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ‘ஜிகர்தண்டா 1’ நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன். பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம். கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.

சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான். நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், நான் இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘பேட்டை’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன். ‘பீட்சா’ இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தை பற்றி நான் அதிகம் பேசமாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. சந்தோஷ் நாராயணன் சொன்ன மாதிரி இந்தப்படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும். அனைவருக்கும் நன்றி.

இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்

தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன்

அசோசியேட் தயாரிப்பாளர்: அலங்கார் பாண்டியன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு

படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி

தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம்

சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்

கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன்

நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர்

ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்

ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா

ஒப்பனை: வினோத். எஸ்

ஆடைகள்: சுபேர்

பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்

ஸ்டில்ஸ்: எம். தினேஷ்

வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: எச். மோனேஷ்

கலரிஸ்ட்: ரங்கா

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான்

டீசர் கட்: ஆஷிஷ்

சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி

ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ்

தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார்

தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள்

நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன். எம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here