‘Irugapatru’ rakes in an overwhelmingly positive response from both critics and audiences alike.
Potential Studios’ Irugapatru is a relationship drama that features an ensemble cast. Vikram Prabhu, Shraddha Rama Srinath, Vidharth, Abarnathi, Shri and Saniya comprises the main cast. The movie is directed by Yuvaraj Dhayalan. The movie was released on october 6th 2023 has emerged victorious in the box office as well as among the audience.
With a stellar cast and an engaging storyline, this poetic story witnessed surge in popularity with each passing day. The overwhelming word-of-mouth praise ensured a remarkable upward trajectory in the movie’s collections. Even on a typical weekday (Monday), the collections have defied all odds, surpassing the first day’s figures.
The movie is also being shifted to bigger screens in multiplexes with increased show timings. This trend not only underlines the film’s incredible entertainment value but also highlights the unwavering support of our beloved audience. This remarkable achievement is a testament to the quality of content that Potential Studios have been constantly delivering to the audiences.
Expressing joy over the success, producer SR Prabu tweeted ‘Monday > Friday’ hinting about the collections. He also quoted “We are overwhelmed by the incredible response to Irugapatru. It has been a labor of love, and we are thrilled to see audiences embracing the film with open arms. The success also proves the power of smaller, character-driven narratives. It is a heartening reminder that the magic of cinema lies not only in extravagance but also in the art of storytelling. This victory is a result of hard work and dedication of our entire team”.
Director Yuvaraj Dhayalan added, “Creating a film like Irugapatru was a challenging yet fulfilling experience, and it’s heartwarming to see it resonate with the audience. We owe our heartfelt thanks to the press for their support and the people who have made this journey memorable. The success of the movie reaffirms the age-old adage that ‘content is the king’ “
The team of Irugapatru extends their heartfelt appreciation to the press and the audience for their unwavering support. This journey would not have been possible without your enthusiasm and encouragement. For those who haven’t experienced the magic of Irugapatru yet, it’s not too late to join the excitement. Head to your nearest theater and be a part of this cinematic phenomenon that’s redefining the way we perceive entertainment.
விமர்சகர்கள், ரசிகர்களின் அமோக வரவேற்பு: வெற்றி பெற்ற ‘இறுகப்பற்று’
‘இறுகப்பற்று’ திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிலும் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் இறுகப்பற்று, தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது. விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ராமா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் வசூலிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
தேர்ந்த நடிகர்களும், சுவாரசியமான திரைக்கதையும் கொண்ட இந்த இதமான கதை வெளியான நாளிலிருந்தே ஒவ்வொரு நாளும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. சமூக ஊடகங்களிலும், பொது வெளியிலும் இப்படம் குறித்த சிறப்பான விமர்சனங்கள் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். வார இறுதியைத் தாண்டி, வார நாளான திங்கட்கிழமை அன்று கூட திரையரங்குகளில் இறுகப்பற்று திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வரிசை கட்டியுள்ளனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு முதல் நாள் வசூலை விட 4வது நாள் வசூல் அதிகமாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மல்டிபிளக்ஸ்களில் இப்படத்துக்கு பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான காட்சிகளும் திரையிடப்படுகின்றன. இது படத்தின் பொழுதுபோக்கு மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், எங்கள் அன்பான பார்வையாளர்களின் அசைக்க முடியாத ஆதரவையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை, பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தொடர்ந்து பார்வையாளர்களுக்கு வழங்கும் தரமான திரை அனுபவங்களுக்கு
இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “இறுகப்பற்று திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள அபாரமான வரவேற்பும், பார்வையாளர்கள் திரைப்படத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளதும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த வெற்றி சிறிய, கதாபாத்திரம் சார்ந்த, ஆழமான கதைகளின் திறனை நிரூபிக்கிறது. வெற்றி என்பது பிரம்மாண்டத்தில் மட்டுமல்ல, கதை சொல்லும் கலையிலும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. இந்த வெற்றி எங்கள் ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலனே” என்று கூறியுள்ளார்.
இயக்குனர் யுவராஜ் தயாளன் பேசுகையில், “இறுகப்பற்று போன்ற ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சவாலான ஆனால் நிறைவான அனுபவமாக இருந்தது. மேலும் இது பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த பயணத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றிய பத்திரிகைகள் மற்றும் ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
இறுகப்பற்று குழுவினர் அனைத்து விதமான ஊடகங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர். உங்களின் உற்சாகமும் ஊக்கமும் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமில்லை. இறுகப்பற்று என்கிற அனுபவத்தை இன்னும் ருசிக்காதவர்கள் உடனே உங்கள் அருகிலுள்ள திரையரங்கிற்குச் சென்று, தமிழ் சினிமாவின் இந்த பெருமைமிகு படைப்பின் வெற்றியில் பங்குபெறுங்கள்.