மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா, அறிமுகங்கள் ரக்ஷனா, ஷியாம் செல்வம், இயக்குன சுசீந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மார்கழி திங்கள். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சுசீந்திரனின் திரைக்கதை அமைத்துள்ளார். ஒளிப்பதி வாஞ்சிநாதன் முருகேஷ், படத்தொகுப்பு தியாகு. வெண்ணிலா நிறுவனம் சார்பில் சுசீந்திரன் தயாரித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு படிகும் ரக்ஷனா தன் தாத்தா பாரதிராஜாவுடன் வசித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் ஷியாம் செல்வத்துடன் படிப்பில் போட்டி, அதை தொடர்ந்து மோதலும் காதலும் வருகிறது. தன் பேத்தியின் காதலுக்கு ஆதிக்க சாதியை சேர்ந்த பாரதிராஜாவால் ஒப்புதல் தரமுடியாத நிலையில் காதலர்களுக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். அந்த நிபந்தனை என்ன? இறுதியில் காதலர்கள் சேர்ந்தார்களா என்பதே மார்கழி திங்கள் படத்தின் கதை.
அறிமுக நடிகர்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கின்றனர் ரக்ஷனாவும், ஷியாம் செல்வமும் , அதே போல் ரக்ஷனாவின் தோழியாக நடித்திருக்கும் நக்ஷாவின் நடிப்பும் குறிப்பிட்டு பாராட்டத்தக்கது. படத்தின் முதுகெலும்பாக இருந்து மொத்த பாரத்தையும் தாங்கி இருக்கிறார் பாரதிராஜா. வில்லனாக மிரட்டி இருக்கிறார் சுசீந்திரன்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன, குறிப்பாக ‘பிடிச்சுருக்கா’ பாடல் வித்தியாசமான முயற்சி. பின்னணி இசையில் இசை ராஜாங்கத்தையே நடத்தி இருக்கிறார். கடைசி 15 நிமிடங்கள் இசைஞானியின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலம், வாஞ்சிநாதன் முருகேஷனின் ஒளிப்பதிவும், தியாகுவின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. செல்லா செல்வத்தின் வசனங்கள் ஷார்ப்பாக இருக்கின்றன. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்துக்குப்பிறகு மீண்டும் ஒரு மைல் கல் படமாக வெளியாகியுள்ளது மார்கழி திங்கள்

மார்கழி திங்கள்: பௌர்ணமி வெளிச்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here