Ever since its inauguration, the ‘AVM Heritage Museum’ has been the talk of the town for its exquisite vintage collections, which is a celebration of legacy, cinema history and carefully preserved archives from films such as Anbe Vaa, Paayum Puli, Sakalakala Vallavan, Yejaman, Sivaji: The Boss, Ayan, Tirupathi and many more, along with an impressive collection of rare automobiles. Today, as a treat to all the ‘Ulaganayagan’ Kamal Hassan fans, who will be celebrating his birthday tomorrow, the museum will be displaying the iconic Royal Enfield Bullet, 1980 model the actor popularised in his film ‘Sakalakala Vallavan’.
AVM Productions’ Sakalakala Vallavan that released on 14 August 1982, widened actor Kamal Haasan’s audience base from the “classes” to a hero of the “masses” and was also praised for his fights and dance. Directed by S. P. Muthuraman and written by Panchu Arunachalam, the film also starred Ambika and Tulasi in pivotal roles. The music of the movie which is memorable for its diverse range of songs was composed by Ilaiyaraaja. The film was a major commercial success and ran for over 175 days in theatres and was the highest-grossing film in Tamil cinema. The film was remade in Hindi as Abhimanyu in 1989.
AVM Productions made the film to prove that ‘Ulaganayagan’ Kamal Haasan was a “Master of all arts”, keeping with the title ‘Sakalakala Vallavan’, which translates to the same.
The Royal Enfield Bullet that featured in the disco song “Ilamai Idho Idho”, remains one of the most popular New Year-themed songs in Tamil cinema, and is played on radio and television channels every New Year. It was this film that brought into vogue the usage of the bullet. Do not miss this wonderful opportunity to catch a glimpse of the iconic bullet.
The museum is open tomorrow for Ulaganayagan’s birthday.
உலகநாயகனின் பெருமைமிகு அடையாளமான புல்லட்டை அவரது பிறந்தநாளில் சேர்த்துக்கொண்ட ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’
‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ துவங்கியதில் இருந்து சினிமாவின் பாரம்பரியத்தை, சினிமா வரலாற்றை கொண்டாடும் அதனுடைய நேர்த்தியான பழமை வாய்ந்த சேகரிப்புகளாலும், மேலும் அன்பே வா, பாயும் புலி, சகலகலா வல்லவன், எஜமான், சிவாஜி ; தி பாஸ், அயன், திருப்பதி மற்றும் பல படங்களில் இடம்பெற்ற அரிய வாகனங்களின் ஈர்க்கக்கூடிய தொகுப்புகளை கவனமாக பாதுகாக்கும் காப்பகமாகவும் ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்து வருகிறது. நாளை (நவ-7) தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக, இந்த மியூசியம் அவரது பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்று பிரபலமான, 1980 மாடல் ராயல் என்பீல் புல்லட்டை காட்சிப்படுத்த இருக்கிறது.
ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரிப்பில் 1982 ஆகஸ்ட்-14ஆம் தேதி வெளியான ‘சகலகலா வல்லவன்’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் ரசிகர் வட்டத்தை ‘கிளாஸ்’-லிருந்து ‘மாஸ் ஹீரோவுக்கு என்கிற அளவில் விரிவிவாக்கியதுடன் அவரது நடனம் மற்றும் சண்டை காட்சிகளுக்காகவும் பாராட்டப்பட்டது.. பஞ்சு அருணாச்சலம் எழுதிய கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப்படத்தில் அம்பிகா மற்றும் துளசி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பலரகப்பட்ட பாடல்களுக்காக இந்தப்படத்தின் இசை இன்றளவும் நினைத்து பார்க்கப்படுகிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ்சினிமாவில் அதிகம் வசூலித்த படமாகவும் மாறியது. 1989ல் ‘அபிமன்யு’ என்கிற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
‘சகலகலா வல்லவன்’ என்கிற பட்டத்திற்கு ஏற்ப, உலக நாயகன் கமல்ஹாசன் சகல கலைகளிலும் வல்லவர் தான் என நிரூபிக்கும் விதமாக ஏவிஎம் புரடக்சன்ஸ் இந்தப்படத்தை உருவாக்கியது.
அந்த ராயல் என்பீல்ட் புல்லட் இடம்பெற்ற “இளமை இதோ இதோ” என்கிற நடனப்பாடல் தமிழ் சினிமாவில் புத்தாண்டை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக திகழ்வதுடன் ஒவ்வொரு புத்தாண்டிலும் வானொலி மற்று தொலைக்காட்சி சேனல்களில் தவறாமல் இசைக்கப்பட்டு வருகிறது. புல்லட்டை அதிக அளவில் பயன்படுத்தும் நடைமுறைக்கு கொண்டு வந்த படமாக இது அமைந்தது. இந்த பெருமை மிக்க அடையாளமான புல்லட்டை நேரில் கண்டு மகிழும் அற்புத வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள்.
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (நவ-7) இந்த மியூசியம் திறந்திருக்கும்.