Chennai, December 12, 2023: MG Motor, a British automobile brand with a rich 100-year heritage, stands firmly with the people of the states of Tamil Nadu and Andhra Pradesh in the wake of the Michaung cyclone’s impact. The carmaker is committed to easing the burden of its customers grappling with vehicle damage due to widespread flooding in Chennai and adjoining areas of the city through a series of initiatives aimed at providing support and relief.
The company has announced a one-month extension on Roadside Assistance (RSA), Annual Maintenance Contracts (AMC), warranty, and extended warranties expiring between 1st December and 31st December 2023. This extension is intended to offer peace of mind to affected customers during this challenging period. Also, to ensure round-the-clock assistance, MG Motor India has established a dedicated 24*7 helpline available at 1800 100 6464, to facilitate seamless communication and support.
Acknowledging the urgency of the situation, MG has deployed a Quick Response Team in Chennai. This team is equipped to handle a spectrum of customer needs promptly, providing on-the-ground assistance during this critical period. To further streamline its customer outreach and support, MG is helping its customers through home visits by its service team. The company-trained technicians will assess the condition of vehicles on-site and coordinate the towing of affected cars to the nearest workshop. Dedicated trucks have been deployed to ensure a swift and efficient towing process.
All these emergency assistive measures shall remain active until the situation normalises.
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எம்ஜி மோட்டார் இந்தியா உதவி
டிசம்பர் 11, 2023: 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான எம்ஜி மோட்டார், மிச்ஜாங் புயலின் தாக்கத்தை அடுத்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில மக்களுக்கு உறுதுணயாக நிற்கிறது. சென்னை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதன் வாடிக்கையாளர்களின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் சுமையை தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நிவாரணத் திட்டங்கள் மூலம் குறைப்பதற்கு இந்த கார் தயாரிப்பு நிறுவனம் மூலம்.உறுதியளித்துள்ளது.
டிசம்பர் 1, 2023 முதல் டிசம்பர் 31, 2023 காலத்துக்குள் முடிவடையும் சாலையோர உதவி (RSA), வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்கள் (AMC), உத்தரவாதம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள் ஆகியவற்றை இன்னும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கடினமான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை வழங்கும் நோக்கில் இந்த நீட்டிப்பு அமைந்துள்ளது. மேலும், 24 மணி நேரமும் உதவி கிடைப்பதற்காக, எம்ஜி மோட்டார் இந்தியா 24*7 பிரத்யேக ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1800 100 6464 என்ற எண்ணில் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
இப்பொதுள்ள நிலைமையின் அவசரத்தை உணர்ந்துள்ள எம்.ஜி நிறுவனம் சென்னையில் குயிக் ரெஸ்பான்ஸ் டீமை நியமித்துள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும், கள உதவிகளை வழங்கவும் இந்த குழு தயாராக உள்ளது. வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு உதவி செய்வதை மேலும் எளிதாக்க, எம்ஜி நிறுவனத்தின் சர்வீஸ் டீம் வீட்டிற்கே வருகைதந்துஅதன் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. நிறுவனத்தின் நன்கு பயிற்சி பெற்ற டெக்னீஷியன்கள் சம்பவ இடத்திற்கே சென்று வாகனங்களின் நிலையை மதிப்பிடுவார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கார்களை அருகிலுள்ள வொர்க்ஷாப்புக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள். விரைவாகவும் திறம்படவும் காரை இழுத்துச் செல்வதற்கு பிரத்யேக டிரக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நிலைமை சீராகும் வரை இந்த அவசர உதவி நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து வழங்கப்படும்
மேலும் தகவலுக்கு: