மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பாதிக்கப்பட்ட இரண்டு இன்ஜின் பைபர் படகுகளுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், பெரிய விசைப்படகு கடலில் மூழ்கும் போது 25லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

சென்னை காசிமேடு இரண்டு இஞ்ஜின் பைப்பர் படகு மீனவர்கள் இன்று 05/02/2024 படகுகளை தொழிலுக்கு அனுப்புவது இல்லை அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணும் வரை படகுகளை தொழிலுக்கு அனுப்புவது இல்லை எனவும் அதுவரை வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு.

இன்று 05/02/2024 திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் காசிமேடு மீன்பிடி துறைமுக பைப்பர் படகு வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 29/01/2024 திங்கட்கிழமை அதிகாலை சுமார் 6.00 மணி அளவில்

சென்னை புதிய வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெரு, எண்: 638 என்ற விலாசத்தில் குடியிருந்து வரும்

வி.மனோகர் என்பவருக்கு சொந்தமான IND TN:02 MO.2054 என்ற அரசு பதிவு எண் கொண்ட இரண்டு இன்ஜின் பைப்பர் படகில் படகின் உரிமையாளர் வி.மனோகரன் தலைமையில் சிவா, ஸ்டாலின், மதி, சந்துரு, மற்றும் பிரபு உள்ளிட்ட ஐந்து சக மீனவருடன் சுமார் 7 நாட்கள் கடல் தங்கி இருந்து மீன் பிடிக்க டீசல், ஐஸ் மற்றும் சாப்பாட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்துடன் தொழிலுக்கு சென்ற பைப்பர் படகு தான் இந்த பைப்பர் படகு ஆகும்.

ஆனால் திடீரென எழுந்த ராட்சத அலையின் காரணமாக பைப்பர் படகுக்குள் தண்ணீர் புகுந்ததால் படகு முழுவதும் தண்ணீர் அதிகமாக புகுந்த காரணத்தினால்

01/02/2024.அன்று காலை சுமார் 11 மணி அளவில் கடலில் நேர் மேலா வடக்கு 13.19, மேற்கு 80.43.கடல் மையில் தொலைவில் ராட்சத அலையின் வேகத்தில் கடல் நீர் படகில் எறியதால் படகு மூழ்க தொடங்கியதால்,

படகில் இருந்த மீனவர்கள் தங்களுடைய உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக்கொள்ள சக மீனவருடைய உதவியை வயர்லெஸ் மூலமாகவும், அதேபோன்று தங்களையும் தங்களுடைய படகுகளையும் காப்பாற்ற தமிழ்நாடு மீன்வளத்துறைக்கு தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தும்,

எந்த விதமான உதவியும் தமிழ்நாடு மீன்வளத்துறையால் செய்ய இயலதால்,

அருகாமையில் இருந்த சக மீனவர்களால் ஆறு மீனவர்களும் காப்பாற்றப்பட்டு சக மீனவருடைய படகில் மீனவர்களை ஏற்றி பாதுகாப்பாக பத்திரமாக அவருடைய படகில் வைத்திருந்தனர்.

தமிழ்நாடு மீன்வளத் துறையின் உதவியை எதிர்பார்த்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்ற மிஞ்சிய காரணத்தினால்

01/02/2024 தேதி அன்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகின் உரிமையாளர் வி.மனோகரன் நடுக்கடலிலிருந்து வேறொரு படகில் உதவியுடன் 01/02/2024 அன்று கரைக்கு திரும்பி வந்து இரவு சுமார் 10மணி அளவில்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரிய விசைப்படகு உரிமையாளரிடம் பேசி உதவி கேட்டு சக மீனவர்களில் ஒருவராகிய ஒருவர் படகில் சுமார் 10 மீனவ தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு அதிகாலை சுமார் 2:00 மணி அளவில் மனோகரன் என்பவருடைய படகு மூழ்கிக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்கு சென்று படகை காப்பாற்ற முயற்சிக்கும் போது அதிகாலை 2:00 மணி அளவில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைபர் படகானது மீனவருடைய கண்முன்னே படகு கடலில் மூழ்குவதை கண்டு துடிதுடித்து போனார் வி.மனோகரன்.

தனது 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள படகு வலைகளை கடல் இழந்து தவித்து கரைக்கு திரும்பிய கண்ணீர் மல்க திரும்பிய மனோகரனுக்கும், உடன் சென்ற ஐந்து மீனவர்கள் என ஆறு மீனவர்களையும் அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் மல்க அவர்களை கட்டி தழுவி கடற் கரையில் கட்டி புரண்டு அழுத காட்சி பரிதாபத்தையும், கரையாத கல் நெஞ்சு கூட கரைய வைக்கும் அளவுக்கு இருந்தது. மீனவர்களும்,மீனவ பெண்களும் கண்ணீர் மல்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கைக்காக பல கோரிக்கைகளை விடுத்தனர் அது பின்வருமாறு.

தமிழ்நாடு மீன்வளத் துறை உடைய மெத்தனப் போக்கை கண்டித்தும் தன்னுடைய படகை காப்பாற்ற மாநில மீன்வளத்துறை எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை, என்ற துயரமான சம்பவத்தை அரசுக்கு வெளி கட்டுவதற்காகவே தமிழக அரசு தங்களுடைய கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக இந்த அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து பின்வருமாறு கோரிக்கைகள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுடைய ஆட்சி காலத்தில்

முத்து, பவளம், நீலம், வலம்புரி என்ற உயிர் காக்கும் பெரிய விசைப்படகுகள் சென்னை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இதுபோன்று மீனவருடைய உயிருக்கு அல்லது உடமைக்கு ஏதாவது பிரச்சனை என்று அறிவித்தவுடன் தமிழ்நாடு மீன்வளத்துறை ஆனது அந்த உயிர் காக்கும் படகை இயக்கி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மீனவர்களையும், படகுகளையும், தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சுனாமிக்கு பிறகு அப்படிப்பட்ட படகுகள் இல்லாத காரணத்தினால் மீனவர்களுடைய உயிருக்கோ, படகுகளுக்கோ, இழப்புகள் ஏற்படும் போது சக மீனவருடைய படகு தயார் நிலையில் இருந்தால் மட்டுமே அந்த நேரத்தில் உதவி செய்யமுடிகின்றது. இந்த மாதிரி உயிரிழப்புகள் பிரச்சனைகள் ஏற்படா வண்ணம் அரசு ஏற்கனவே ஏற்படுத்தி இருந்த முத்து, பவளம், நீலம், வலம்புரி போன்ற உயிர் காக்கும் அதிநவீன வசதிகள் உடன் கூடிய படகுகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.

இரண்டு இன்ஜின் பொருத்திய படகை நாட்டு படகாக கருதி அதற்காக இழப்பீடு தொகையாக ரூபாய் 75 ஆயிரம் வழங்கும் அரசாணையை மாற்றி தமிழ்நாடு மீன்வளத்துறை இந்த இரண்டு எஞ்சின் பைபர் படகுகளுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடகா வழங்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உடைய பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் என மொத்தம் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பெரிய விசைப்படகுகள் கடலில் மூழ்கினால் அதற்காக வழங்கக்கூடிய இழப்பீடு தொகை ரூபாய் 5 லட்சத்தை ரூபாய் 25 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், அதேபோன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உடைய பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்ச ரூபாய் என 35 லட்ச ரூபாய் பெரிய விசை படகுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டுப் படகுகள். கடல் மூழ்காமல் இருக்க வேண்டும் என்றால் தற்போது உள்ள நாட்டுப் படகுகளின் நீளம் 15 மீட்டரில் இருந்து அதிகரித்து. சுமார் 18 மீட்டர் நீளமாக உயர்த்தினால் மட்டுமே படகுகளில் கடல் நீர் இயற்கை சீற்றத்தில் இருந்து படகுகளை, மீனவர்களையும் காப்பாற்ற முடியும் என்பதற்காக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட ஆணைய விதிமுறைகளை அரசாணையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் கடலில் தவித்து பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து கரை திரும்பினாலும் அவர்களை மீன்வளத் துறையின், உயர் அதிகாரிகளோ, மீன்வளத்துறை அமைச்சரோ, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரோ, தொகுதியினுடைய அமைச்சர்களோ மீனவர்களை கண்டு கொள்வதில்லை என்பது மீனவர்களின் பெரும் துயரம் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்திற்கு கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள மூன்று மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய இந்த காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலே பாதிப்பு ஏற்பட்டால் கூட மீன்வளத்துறை அமைச்சர் அவர்கள் வந்து பார்வை இடுவதும் இல்லை, அதை சரி செய்வதும் இல்லை, நிவாரணம் வழங்குவதும் இல்லை, மீனவர் அல்லாதவரை மீன்வளத்துறை அமைச்சராக ஆக்கி இந்த மீனவர்களை கொடுமைப்படுத்துவதை மாண்புமிகு தமிழக முதல்வர்கள் மறுபரிசினை செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி ஈட்டி தரக்கூடிய இந்த மீனவர்கள் நாங்கள் கேட்டுள்ள சிறு சிறு விஷயங்கள் அரசுக்கு பெரிய விஷயமாக இருக்கப்போவதில்லை எனவே அனைத்தையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்

தொடர்புக்கு.
காசிமேடு கடற்கரை இரண்டு இன்ஜின் பைபர் படகு உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம்
9789989540 ,9566295502, 9790990065, 9840996193, 9176841334, 9087005672.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here