உரிமைகளை மீட்க ஸ்டானின் குரல் என்ற நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில், விருதுநகர் அல்லம்பட்டி விலக்கில் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணநிதி எம்.பி,

டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக பல இன்னல்களுக்கு மத்தியில் போராடினார்கள். அவர்களை முடக்க ஒன்றிய அரசு பல முயற்சி செய்தது. ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் எதிர்க்க கூடாது. பாஜக ஆட்சியில் குறைந்த அளவு நாடாளுமன்ற கூட்டத்தொடரே நடந்துள்ளது.

பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என நியாயம் கேட்டதற்கு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டோம். எதிர் கட்சியே இல்லாமல் நாடாளுமன்றம் நடத்திய பெருமை பாஜகவை சேரும். பாசிம் வீழட்டும். இந்தியா கூட்டணி வெல்லட்டும். விருதுநகர் திராவிட இயக்கத்துடன் பயணம் செய்யக் கூடிய மண். மத்தியில் உள்ள பாசிச பாஜக அரசை விரட்டுவோம். இந்தியாவை மீட்போம்.

100 நாள் வேலை செய்பவர்களுக்கு மாத கணக்காக ஊதியம் வரவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதியை கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் பெறப்படும் நிதியை கொடுப்பதில்லை. ஒன்றிய அரசு வழிப்பறியில் ஈடுபடுகிறது. உத்திரப் பிரதேசம் பின்தங்கிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் பாஜக தான். அங்கு திராவிட மாடல் ஆட்சி இல்லை. அதன் காரணமாக உத்திரப் பிரதேசம் வளரவில்லை. மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை. கேலி கூத்து” என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here