என் நண்பர்களிடம் பொதுவாக தியானம் செய்யலாம் என சொன்னால், என்ன சொல்றீங்க? அதெல்லாம் வயசான காலத்தில் செய்வது தானே ? என்பார்கள். இந்த மாதிரி, பொதுவான கருத்து எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் நான், வாழும் காலத்தில் தான் தியானம் தேவை என்று சொல்வேன், வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது எதுவானாலும் அதை எதிர்கொள்ள தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு என் வாழ்வில் மிகப்பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நான் 25 வருடமாக தியானம் செய்து கொண்டிருக்கிறேன். நான் இப்போது டிரெய்னராகவும் ஶ்ரீ ராமசந்திரா மிஷனின் தியான அமைப்பில் இருக்கிறேன். என் குருநாதர் ஷாஜி.

ஹைதராபாத்தில் ஹன்கா சாந்திவனம் என்ற ஒன்று இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமர்ந்து தியானம் செய்யலாம். என் குருநாதர் தியானம் குறித்து ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்த வேண்டும், அது தான் எனது கனவு என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அந்த நெடுநாள் கனவு மார்ச் 14,15,16 நிறைவேறுகிறது. இந்த மகா சங்கமத்தில் உலகமெங்குமிலுமிருந்து, தியானத்தில் சிறந்த குருநாதர்கள், நிறுவனங்கள் என பலர் கலந்துகொள்கின்றனர். பல நாடுகள் இதில் கலந்துகொள்கின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். இது மிக அரிய சந்தர்ப்பம் இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன். இந்த மகா சங்கமத்தில் நாம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்பது, எனது விருப்பம். “குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமம்” அனைவரும் வாருங்கள் பயன் பெறுங்கள் நன்றி.

அன்புடன்
உங்கள்

N.லிங்குசாமி

  • Johnson PRO

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here