வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ‘சபரி’! – மே 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
மஹா மூவிஸ் நிறுவனம் சார்பில் மகரிஷி கோண்ட்லா வழங்க, மகேந்திரநாத் கோண்ட்லா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அனில் காட்ஸ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘சபரி’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் மே மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் மகேந்திரநாத் கோண்ட்லா கூறுகையில், “’சபரி’ புதுமையான கதை மற்றும் திரைக்கதையுடன் உருவாகியிருக்கிறது. வலுவான கதைக்களத்தோடு உணர்வுப்பூர்வமான மற்றும் விறுவிறுப்பான திரில்லர் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுணியில் உட்கார வைக்கும்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் இதுவரை நடித்திராத மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதோடு, தனது நடிப்பு மூலம் ரசிகர்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்துவார். தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளின் இறுதிப் பிரதிகளைப் பார்த்தவர்கள் படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறியது, எங்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. பிற மொழி டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ‘வேர்ல்ட் ஆஃப் சபரி’ முன்னோட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு எங்கள் படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு, ‘சபரி’ படத்தை மே 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறோம்.” என்றார்.
இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்க, கணேஷ் வெங்கட்ராமன், ஷஷாங்க், மைம் கோபி, சுனயனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, விவா ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ணதேஜா, பிந்து பகிடிமரி, அஸ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா பாபி நீவே ஆனந்த், பிரமோத் ஆனந்த், சிறுமி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனில் காட்ஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் இணை எழுத்தாளராக சன்னி நாகபாபு மாற்றும் நனை சமி
தொழில்நுட்ப கலைஞர்கள்:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அனில் காட்ஸ்
இணை எழுத்தாளர் – சன்னி நாகபாபு
ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீவத்சவா, நானி சமிடி ஷெட்டி
இசை : கோபி சுந்தர்
கம்போசர் – மகரிஷி கோண்ட்லா
பாடல்கள் – ரஹ்மான், மிட்டபள்ளி சுரேந்தர்
படத்தொகுப்பு – தர்மேந்திர ககரலா
கலை இயக்குநர் – ஆஷிஷ் தேஜா பூலாலா
நடன இயக்குநர்கள் – சுசித்ரா சந்திர போஸ், ராஜ் கிருஷ்ணா
ஸ்டண்ட் இயக்குநர் – நந்து-நூர்
ஒப்பனை – சித்தூர் ஸ்ரீனு
ஆடைகள் – ஐயப்பா
ஆடை வடிவமைப்பாளர் – மானசா
புகைப்படக்கலைஞர் – ஈஸ்வர்
தயாரிப்பு நிர்வாகி – லட்சுமிபதி காந்திபுடி
இணை இயக்குநர் – வம்சி
நிர்வாக தயாரிப்பாளர் – சீதாராமராஜு மல்லேலா
தயாரிப்பு நிறுவனம் – மஹா மூவிஸ்
தயாரிப்பாளர் – மகேந்திரநாத் கோண்ட்லா
பி.ஆர்.ஓ – சரவணன் – அஷ்வத்