தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நடராஜர் நாட்டியாலயம் இணைந்து நடத்திய மாபெரும் பரத நாட்டியப் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் 14/4/24 நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற புலியூர் வீ. திருப்பதி, கருர் K. சிவக்குமார், சமூக ஆர்வலர் நடேசன், மனித நேய திலகம் V. கண்ணன் அவர்கள் கலந்து கொண்டனர். நன்றியுரை செல்வி நந்தினி வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச விளையாட்டு வீரரும், சமூக சிந்தனையாளருமான டாக்டர். மா. ரா. செளந்தரராஜன் அவர்கள் பேசிய போது, குழந்தைகளை பார்ப்பதே மகிழ்ச்சி. குழந்தைகள் தெய்வீகத் தன்மையோடு பரத நாட்டிய உடையில் இருக்கிறீர்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேருங்கள். உங்களால் முடியும். திறந்த புத்தகமாக இருங்கள். அம்மா அப்பா கண்ணுக்குத் தெரிந்த முதல் கடவுள். பெற்றோர் சொல்வதை கேளுங்கள். உங்களுக்காகவே அவர்கள் வாழ்கிறார்கள். பெற்றோரோடு பேசும்போது சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். வளரும் பருவத்தில் அம்மா அப்பா சொல்வதை கேட்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.நாட்டிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழோடு பரிசுத்தொகையும் வழங்கி சிறப்பித்தார்.மேலும் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் பா. சதீஷ் வாழ்த்துரை வழங்கினார்.நன்றியுரை நந்தினி வழங்கினார்.