The decision to forgo a traditional background score in “Tractor” and instead rely on sync sound and real ambience sound adds another layer of authenticity to the film. By capturing the artist’s dialogues on-site and incorporating natural ambient sounds, the filmmakers create a more immersive experience for the audience, allowing them to feel fully immersed in the world of the film.
The movie “Tractor” is more than mere cinematic entertainment to raise meaningful debates and naturally showcase the atrocities that corporate culture is doing in the lives of our farmers.
The film Tractor is produced by Jayanthan, his first venture in film production under the banner Friday Entertainment (France)
Friday Entertainment is involved in the theatrical distribution of Indian movies. The company has released most of the films from India including Jawan, Jailer, Leo in theatres in France.
This crew mostly debuts, The Director of this movie Ramesh Yanthra is already known for his Documentary films Gudiyam Caves, and The Father of Indian Prehistory and he was a former student of the College of Fine Arts, Chennai. This is his first Feature film and he came from the Information technology Industry.
Co-Incidently this film’s male lead Prabakaran Jayaraman
and female lead Sweetha Pradhap also from the IT Industry and both are new faces on the screen. Another two-character role was done by Pillaiyarpatti Jayalakhsmi & Director Ramshiva.
This film cinematographer Gowtham Muthusami was the assistant of well-known Cinematographer Rajesh Yadav and Edited by Sudharson, the Sound Design was composed by Rajesh Saseendran and Production design was done by eminent Art Director T.Muthuraj.
Being listed in the official selection of the Dada Saheb Phalke Film Festival is a remarkable accomplishment. It speaks volumes about the quality and creativity of the film, especially considering the rigorous selection process and the high standards set by the festival. It’s a testament to the talent and hard work of the filmmakers behind Tractor. This recognition will surely open up more opportunities for the film to reach a wider audience and gain further acclaim.
The film crew is planning to go to the market segment of the Cannes Film Festival with an international premiere status and plans to have a special screening for Tamils living in Paris.
பின்னணி இசையே இல்லாத தமிழ் திரைப்படமான டிராக்டர் 14வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
“டிராக்டர்” திரைப்படத்தில் வழக்கமான பின்னணி இசை சேர்ப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக நடிகர்களின் வசனத்தை தளத்திலே பதிவு செய்தும் மற்றும் இயற்கையான சுற்றுப்புற ஒலியை பதிவு செய்து (Sync Sound) பயன்படுத்தி இருப்பது, வாழ்வியலின் நம்பகத்தன்மையை ஏற்படுத்த உதவியுள்ளது.
“டிராக்டர்” என்ற திரைப்படம் வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பவும் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் ஜெயந்தன் தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக திரைப்படத் தயாரிப்பில் முதல் முயற்சியாக தயாரித்த படம் டிராக்டர்.
ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் இந்தியாவில் உருவாகும் அனைத்து மொழி திரைப்படங்களையும் பிரான்சில் உள்ள திரையரங்கு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் ஜெயிலர் ஜவான் முதல் லியோ வரை அனைத்து மொழி திரைப்படங்களையும் பிரான்சில் உள்ள திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.
இந்த திரைப்பட குழுவினர் பெரும்பாலும் அறிமுக கலைஞர்கள்.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களால் அறியப்பெற்றவர் மற்றும் அவர் சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதுகலை மாணவர் ஆவார். இது அவரது முதல் திரைப்படம் மற்றும் அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்து வந்தவர்.
இயக்குனரைப்போலவே இந்தப் படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன்
மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப் இருவரும் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் இருவரும் திரைப்படத்திற்கு புது முகங்கள். துணை கதாபாத்திரத்தில் பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி மற்றும் இயக்குனர் ராம்சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் முத்துசாமி, பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் உதவியாளர், சுதர்சன் படத்தொகுப்பாளராகவும், ஒலி வடிவமைப்பை ராஜேஷ் சசீந்திரன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை பிரபல கலை இயக்குனர் டி.முத்துராஜ் செய்துள்ளார்கள்.
இந்த டிராக்டர் திரைப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
டிராக்டர் படத்தின் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கும் திரைப்பட குழுவின் திறமை மற்றும் உழைப்புக்கு இது ஒரு சான்று.
இந்த அங்கீகாரம் டிராக்டர் திரைப்படத்தை பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் மேலும் சில வெற்றிகளை தொடவும் நிச்சயமாக அதிக வாய்ப்புகளைத் ஏற்படுத்தும்.
இந்த திரைப்பட குழுவினர் சர்வதேச பிரீமியர் அந்தஸ்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவின் சந்தைப் பிரிவுக்குச் செல்லவும், மேலும் பாரிஸில் வாழும் தமிழர்களுக்காக ஒரு சிறப்பு திரையிடல் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.