‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும்.

இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர சந்திரஹாசா’ – பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார்.

‘வீர சந்திரஹாசா’வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும். பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தார்.

இந்த திரைப்படம் அந்த லட்சியத்தின் பலனை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி படைப்பு ரீதியிலான பாய்ச்சல் மட்டுமல்ல… ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல் என்றும் சொல்லலாம். இந்த படைப்பில் கணிசமான வளங்களை முதலீடு செய்வதன் மூலம், இந்த செழுமை மிக்க கலை வடிவத்தை பாதுகாத்து கொண்டாடுவதற்கு இயக்குநரான ரவி பஸ்ரூர் மிகுந்த துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் வழங்கி உள்ளார்.

யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி என்பது துணிச்சலானது மற்றும் பாராட்டுக்குரியது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல… கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழிபெயர்க்கும் திறனும் தேவை. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.

புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக.. இந்த அற்புதமான அணுகுமுறையுடன் தொடங்கப்பட இருக்கும் ‘வீர சந்திரஹாசா’ கொண்டாடப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here