சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள Sree Shanthi Anand Vidyalaya பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச விளையாட்டு வீரரும் சமூக சிந்தனையாளரும் எழுத்தாளருமான டாக்டர். மா. ரா. செளந்தரராஜன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அவர் பள்ளி மாணவ மாணவிளுக்கு தமிழகத்தில் தாய்மொழிக்கல்வியின் அவசியத்தையும்,இந்தியாவில் தேசிய மொழியை பற்றியும், எல்லா பெற்றோர்களும் விரும்புவது போல உலக அளவில் போட்டி போட ஆங்கிலத்தின் அவசியத்தையும் திறம்படக் கூறினார். விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் இம்மூன்று துறைகளின் அடிப்படை வளர்ச்சியையும், அதன் முன்னேற்றத்தையும் தன்னுடைய பேச்சில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் படிப்பின் மகத்துவத்தையும், வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகளையும், பெற்றோர்களின் அர்ப்பணிப்பையும் தெரிவித்தார்.

விழாவில் பள்ளியின் தாளாளர் திரு. விவேகானந்தன், தலைமையாசிரியர் மீனாட்சியம்மாள், முன்னாள் ஆசிரியர் அய்யாவு ஆகியோர் கலந்து கொண்டனர்.ஏராளமான மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here