மலேசியாவில் நெகிரி செம்பிலான் பகுதியில்(Negiri Sembilan )உள்ள மீசாமால் நிலையத்தில்(Mesamall Nilai )நவம்பர் 15 முதல் 18 வரை நடைபெற்ற மலேசிய சிலம்ப போர்க்கலை மன்ற 7 ம் ஆண்டு கலாசார சிலம்பம் போர்க்கலை பெடரேஷன் நடத்திய சிலம்ப போட்டியில் நமது மாணவர்கள் ஈசன் சிலம்பாலையா மற்றும் ஆதித்தனார் சிலம்ப கலைக்கூடம் மாணவர்கள் இந்தியா சார்பாக மலேசியாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டார்கள்.
இப்போட்டிக்கு தலைமையேற்று கலைமுதுமணி முருகக்கனி ஆசான் மற்றும் அண்ணாவி ஜே ஈசன் ஆசான் இவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் இருந்து மாணவ மாணவிகள் மலேசியா சென்று போட்டியில் கலந்து கொண்டு பத்து கோல்டு மெடல் (10 Gold),14 சில்வர் மெடல் (14 silver ),8 பிரான்ஸ் (8 bronze)மெடல் கொண்டு வந்துள்ளார்கள். இப்போட்டி நவம்பர் 16,17 தேதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. மலேசியா நடைபெற்ற போட்டியில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர்,இந்தியா 4 தேசங்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா இரண்டாம் பரிசை வென்றது. அகில பாரத சிலம்பம் கவுன்சில் சார்பாக கலந்து கொண்டு இப்போட்டியில் வென்று வந்தார்கள். இப்போட்டிக்கு ஆசான் கலைமுதுமணி முருகக்கனி ஆசான் அவர்கள் அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர் அண்ணாவி ஜே ஈசன் மற்றும் தமிழ்நாடு சிலம்பப் பேரவை துணைப் பொதுச் செயலாளர் ஆசிகை டி. சண்முகப்பிரியா அவர்கள் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here