மனிதனைத் தின்று மனிதனை சாப்பிடும் ஒரு வரி கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்.
ரத்தம் மற்றும் இருட்டு ஆகிய இரண்டையும் மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் குரு கார்த்திகேயன்.. எனவே இந்த படத்திற்கு ஆங்கிலத்தில் பிளட் மற்றும் பிளாக் என்று தலைப்பிட்டுள்ளார்.
ஒரு பிரச்சினையில் சிக்கி எமனை வென்று உயிர் பிழைத்து வந்த நாயகியிடம் போலீஸ் அதிகாரி விசாரணையை தொடங்குகிறார்.. அவர் தனக்கு நடந்த கொடுமையை பற்றி விவரிப்பதுடன் படம் தொடங்குகிறது..
எம்.எல்.ஏ ஒருவரின் மகள் ஷர்மிளா. தனது தந்தை முதல்வரை பார்க்க வெளியூருக்கு சென்று இருக்கும் சூழ்நிலையில் தன் காதலர் சுகி விஜய்யை தனிமையில் சந்திக்க ஆசைப்படுகிறார் ஷர்மிளா. அதன்படி இருவரும் ஒரு ரெசார்ட்டில் சென்று தங்குகின்றனர். அப்போது அங்கே வரும் வில்லன் யானி ஜாக்சன் காதலர்களை கடத்தி சவப்பெட்டி போன்ற மரப்பெட்டியில் இருவரையும் தனித்தனியே அடைத்து வைக்கிறார்.
இறுதியில் எம்எல்ஏ மகளை காதலனுடன் கடத்த என்ன காரணம்? யானி ஜாக்சன் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுகி விஜய் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஷர்மிளா இருவரும் பதட்டம், ஏமாற்றம், அழுகை, பரிதவிப்பு என அனைத்தையும் முகபாவனைகளில் காட்டி இருக்கின்றனர்.
பல படங்களில் சைக்கோ கில்லரை பார்த்திருப்போம்.. தொடர் கொலைகளை செய்யும் வில்லனை பார்த்திருப்போம்.. ஆனால் இதில் முழுக்க முழுக்க மாறுபட்டு மனிதனை பார்க்கிறோம்.. யானி ஜான்சன் எதுவும் பேசாமலேயே தன் கதாபாத்திரத்தை பேச வைத்திருக்கிறார்.. அதுவும் பல காட்சிகளில் மனித மூளையை வெட்டி சாப்பிடுவது எல்லாம் ஏற்க முடியாத கற்பனை.
மனிதனைத் தின்று மனிதனை சாப்பிடும் ஒரு வரி கதையை இரண்டாம் உலகப் போரில் இருந்து தொடங்கியிருக்கிறார் இயக்குனர் குரு கார்த்திகேயன். அதன்படி வில்லனின் தாத்தா வழி ஆராய்ச்சியை சொல்ல இந்த கொலைகளை அவர் செய்வதாக சொல்லப்பட்டுள்ளது..
தமிழ் படமாக இருந்தாலும் பல காட்சிகளில் ஆங்கிலத்திலேயே கதை வசனம் நகர்த்தப்பட்டுள்ளது.. முக்கியமாக வில்லன்கள் படத்தில் எந்த வார்த்தைகளும் மௌனமாக இருந்து காரியத்தை சாதிப்பது வித்தியாசமான கற்பனை.. இருட்டில் இரத்தம் தெறிக்க தெறிக்க கதை சொல்லி இருக்கிறார். இறந்து போன மனித உடலில் புழுக்கள் ஊர்ந்து செல்வதை பார்க்கும் போதெல்லாம் அருவெறுப்பாக இருக்கிறது. அதிக இரத்த காட்சியை தவிர்த்து இருக்கலாம்.
மோகன் சந்திராவின் ஒளிப்பதிவும் ஹரி தாஸ்சின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம்.