கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு.

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதரி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

பழநி பாரதி, தேன்மொழி, பொன்னடியான் ஆகியோர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர். இஸ்ரத் காதரி, ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்வேதா, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இசை பாவலர் வரதராஜன் மகன் சிவராமன். ஒளிப்பதிவு வில்லியம், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.
குலுமணாலி, ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது!