தன்னுடைய இளைமைக்கு காரணமே தண்ணீர் தான் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தோயோ ஏஸ்த்தெடிக் சலூனை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், தினமும் காலை எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் பருகுவேன் என்று கூறினார். நாள் முழுவதும் தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க முடியும் என்று ரவி மோகன் தெரிவித்தார். ஜெயம் படத்தில் நடிப்பதற்காக மட்டுமே பார்லர் சென்றதாக கூறிய ரவி, அதன்பிறகு அழகு படுத்திக்கொள்வதற்காக அழகுநிலையங்களுக்கு தான் சென்றதே கிடையாது என்று கூறினார். தன்னுடைய வீட்டுக்கு அருகிலேயே இருக்கக் கூடிய தோயோ கிளினிக்கிற்கு அடிக்கடி வரப்போவதாகவும் தெரிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் சகோதரி மகாலட்சுமியின் தோயோ சலூன் திறப்பு விழாவில் ஐசரி கணேஷும் கலந்து கொண்டார். திறப்பு விழாவுக்கு வந்த இருவரையும் குழந்தைகள் உற்சாகமாக நடனம் ஆடி வரவேற்றார்கள். விழாவில் நடிகர் வருண், பிக்பாஸ் பிரபலம் வர்ஷினியும் கலந்துகொண்டனர்.