
ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘காலை மலர்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘சிரிப்போம் சிந்திப்போம்’. இதனை பிரபல பேச்சாளர் திரு.சுந்தர ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார். இதில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்படியாக குட்டிக்கதைகள் சொல்லப்படுகின்றன. இப்பகுதியானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.