சென்னை, மார்ச் 1 – நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் க்ளெனீகில்ஸ் ஹாஸ்பிடல்சென்னை, நீரிழிவு சிறப்பு கிளப்பை திறந்துள்ளது. இந்த கிளப்பை க்ளெனீகில்ஸ் மருத்துவமனையின் சென்னை மற்றும்ஐதராபாத் கிளஸ்டர் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர் ராவ் மற்றும்உள் மருத்துவம் மற்றும்நீரிழிவு மருத்துவத் துறையின் தலைவர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் அஸ்வின் கருப்பன் ஆகியோர் முன்னிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் திறந்து வைத்தார்.மேலும் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரத்யேக கால் சென்டர் எண்ணையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த கிளப் நோயாளிகளுக்கு நீரிழிவு குறித்த விழிப்புணர்வு, பிரத்யேக நீரிழிவு உதவி எண்ணை தொடர்பு கொள்ளுதல், சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்க உள்ளது.நீரிழிவு சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன்தனிநபர் ஆரோக்கியத்தில் இந்த கிளப் மிகுந்த கவனம் செலுத்தும். மேலும் இதன் கால் சென்டர், இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்தும், நீரிழிவு நோய்க்கு முந்தைய தடுப்பு மற்றும் நீரிழிவு மேலாண்மை குறித்தவிழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
இது குறித்து டாக்டர் அஸ்வின் கருப்பன் கூறுகையில், தற்போது 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,மேலும்13.6 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதால், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகராக உருவெடுத்துள்ளது.நகரமயமாக்கல், மரபணு முன்கணிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. பலர் தங்களுக்கு நீரிழிவு இருப்பது குறித்து அறியாமல் உள்ளனர். இதன் காரணமாக நீரிழிவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியாமல் போகிறது. வழக்கமான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆரம்பகால சிகிச்சைகள் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க மிகவும் முக்கியமானதாகும். எனவே நீரிழிவு சிகிச்சையில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் எங்களின் நீரிழிவு சிறப்பு கிளப் துவக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் நோயாளி ஈடுபாடும் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய அவர் “நீரிழிவு நோயை மருந்துகளால் மட்டும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலாது. அது குறித்த விழிப்புணர்வு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவையும் மிகவும் முக்கியமானதாகும். எங்களின் இந்த கிளப் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்குவதோடு, அவர்கள் தங்கள் நிலையை திறம்பட நிர்வகிக்க சிறந்த மருத்துவ ஆலோசனை, தொழில்நுட்பம்,அவர்களுக்கான ஆதரவுஆகியவற்றுக்கு உறுதி அளிக்கிறது’’ என்றும் தெரிவித்தார்.
க்ளெனீகில்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மற்றும் ஐதராபாத் கிளஸ்டர் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர் ராவ் கூறுகையில், அதிநவீன தொழில்நுட்பம், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ வல்லுனர் குழுவுடன்நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதன் மூலம் உயர்தர சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். அந்த வகையில் எங்களின் புதிய நீரிழிவு சிறப்பு கிளப் துவக்கப்பட்டு உள்ளது.இது மருத்துவ சிகிச்சையை அனைவரும் எளிதாக அணுகக்கூடியதாகவும், அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதற்குமான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. எங்களின் சமீபத்திய அதிநவீன மருத்துவ சாதனங்களும், சிறந்த மருத்துவர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சையை மட்டுமல்ல, முழுமையான பராமரிப்பு சூழலை வழங்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
நீரிழிவு என்பது இந்தியாவின் சுகாதார பிரச்சினைகளில் முக்கிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வேண்டும் என்பதற்காகவும் இந்த கிளப்பை க்ளெனீகில்ஸ் ஹாஸ்பிடல் சென்னை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.