மார்ச் 5-ல் நாசர் அவர்கள் தனது 67-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இயக்குனர் மிஷ்கினுக்கும் நாசர் அவர்களுக்கும் மகனுக்கும் தந்தைக்குமான உறவு. முகமூடி, நந்தலாலா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘ட்ரைன்’ படத்தில் இணைகிறார்கள்.
‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நாசர். இவ்வருடம் திரையுலகத்தில் நாசர் அவர்களின் 40-ம் ஆண்டாகும். இந்த பிறந்த நாளில் நாசர் எனும் மகத்தான கலைஞனை கொண்டாடுவோம்.