Espionage thriller enthusiasts, get ready for a high-octane cinematic experience! Sony LIV is all set to premiere Akhil Akkineni’s Agent, an adrenaline-pumping spy thriller, exclusively on its platform starting March 14, 2025.
Directed by Surender Reddy, Agent follows the story of Rickey, an ambitious RAW agent tasked with a critical mission by RAW chief Colonel Mahadev, also known as The Devil. Rickey is sent undercover as a rookie to capture Dharma, aka The God, a former RAW agent with a terrifying plan to destroy India. But when the mission takes an unexpected twist, the stakes skyrocket.
Featuring a powerhouse cast that includes Akhil Akkineni, Mammootty, Dino Morea, Sakshi Vaidya, Denzil Smith, and Vikramjeet Virk, Agent promises thrilling performances all around. The screenplay, written by Surender Reddy, is based on a gripping story by Vakkantham Vamsi. The film is produced by Rambrahmam Sunkara, Ajay Sunkara, and Pathi Deepa Reddy under the banners of AK Entertainments and Surender 2 Cinema.
Mark your calendars, Agent will be streaming exclusively on Sony LIV starting March 14, 2025!
Link: https://www.youtube.com/watch?v=5W6afZ_tMsk
இளைய சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கப் போகின்ற ஒரு புத்தகம்!
ஒரு ஊடக முன்னோடியின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த பதிவு
சென்னை: ஊடகத் துறையில் ஒரு முக்கிய நபராக விளங்கும் நரசிங்கபுரம் செல்லமுத்து ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் வகையில் “ஒரு வானவில் வாழ்க்கை” என்ற நூல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக ஊடகத்துறை வெளியிட்டுள்ள இந்த நூலை, பிரபல எழுத்தாளரும், பிபிசி உலகம் ஆராய்ச்சித் துறை முன்னாள் தலைவருமான ஆர். ராணிமைந்தன் எழுதியுள்ளார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஊடகத் துறையின் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமாக இருந்த ராஜாமணியின் பயணத்தை விரிவாக இந்நூல் பதிவு செய்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் வணிகக் கல்லூரியின் முன்னாள் மாணவரான ராஜாமணி, மெட்ராஸ் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பல புதுமைகளைப் புகுத்தி அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். மேலும், மலேசியாவின் ஆஸ்ட்ரோ டிவி உள்ளிட்ட நிறுவனங்களிலும் ராஜாமணி முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றை தொடர்ந்து அதிக நேரம் டிஜிட்டல் நேரலை செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தது திரு ராஜாமணி அவர்களின் வெற்றிகளில் ஒன்று. மேலும், ’மாற்று எரிசக்தி’ குறித்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஆவணப்படம் ஒன்றை தயாரித்த ராஜாமணியின் செயல், அவரது எதிர்காலம் குறித்தப் பார்வைக்குச் சான்று.
ராணிமைந்தன் அவர்கள், டாக்டர் ராஜாமணியின் வாழ்க்கையை உயிர்ப்புடன் பதிவு செய்துள்ளார் எனவும், இந்த நூல், ஊடகத் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு மிகப் பெரும் வழிகாட்டியாக இருக்கும் எனவும் இந்நூலின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுப் பேசிய, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜே. ராதாகிருஷ்ணன், “ஒரு எளிய கிராமத்தில் பிறந்து, தனது தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் உயர்ந்த ராஜாமணி குறித்த இப்புத்தகம் அவசியம் வாசிக்கப்படவேண்டிய நூல்” என்று கூறினார்.