The Short Film ‘Mouna Vadham’, which received awards in Film Festivals like Indian Panorama International Film Festival, Chennai International Film Festival, 18th Mumbai International Film Festival and Jaipur International Film Festival is getting released in Actor Vijay Sethupathi’s YouTube channel this evening by 6 pm.

The film has Actor & Writer Vela Ramamoorthy playing an important role. This short film is directed by Amirtha raja who earlier assisted Director Balaji Tharaneetharan in Naduvula Konjam Pakkatha Kaanom and Oru Pakka Kathai. Saraskanth kannaiyan who did Cinematography for Seethakathi handled the camera, while Revaa does the Music who earlier did music for Mugizh and Ayali. Editing done by R. Govindaraj who is known for his works in Movies like Naduvula konjam pakkaththa kaanom, 96, Seethakaathi and Meyyazhagan. The Film is produced by Pocket Money Films.

பல விருதுகள் குவித்த ‘மெளன வதம்’ குறும்படம் ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ யூடியூப் சேனலில் வெளியீடு!

எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ‘மெளன வதம்’ குறும்படம் சென்னை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல், இந்தியன் பனோரமா இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் மற்றும் 18 ஆம் மும்பை இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் போன்ற பல பிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகள் பெற்றுள்ளது. இந்த குறும்படம் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதியின் யூடியூப் சேனலில் வெளியாகிறது.

இப்படத்தை அமிர்த்தராஜா இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். சீதக்காதி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரஸ்காந்த் கண்ணையன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘முகிழ்’ மற்றூம் ‘அயலி’ பட இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், 96, சீதக்காதி மற்றும் மெய்யழகன் போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு மேற்கொண்ட ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.’பாக்கெட் மணி பிலிம்ஸ்’ இப்படத்தை தயாரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here