புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “புதிய வாசிப்பு புதிய சிந்தனை” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:50 மணிக்க ஒளிபரப்பாகும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி.

அன்றாடம் வெளிவரும் எல்லா செய்தித்தாள்களையும் வாசித்து அதில் சிறந்த நடுப்பக்க கட்டுரைகளை கண்டடைவதும் அதன் உள்ளார்ந்த அர்த்தந்தங்களை நுணுக்கங்களை புரிந்து கொள்வது என்பது கடினமான காரியம். அதை மிக எளிதாக்கித் தருகிறது புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சி.

துறைசார்ந்த வல்லுநர்களுடன் தேர்ந்த நெறியாளர்கள் அமர்ந்து அலசி ஆராயும் இந்நிகழ்ச்சி அறிவுப்பசி உடையோருக்கு சரியான தீனி. அரசியல் மாற்றங்கள், தினசரி வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய சமூக விஷயங்கள் போன்றவையே இந்நிகழ்ச்சியின் பிரதான பேசு பொருள். ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட விஷயம் தொடர்பான தெளிவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் விஜயன் மற்றும் கார்த்திகேயன் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here