
ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் துயாயில் நடைபெற்ற இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சௌந்தர ராஜா
தமிழக வெற்றிக் கழகம் மீதான பொறாமையில் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பர் – நடிகர் சௌந்தர ராஜா

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் அவர்களின் அன்பு தம்பியுமான திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
மேலும் இந்த நிகழ்விற்கு கழகத் தலைவர் அவர்களின் தாய்வழி உறவினரான பல்லவி வினோத்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோரும் பொது அமைப்புகள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சௌந்தர ராஜா, “தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கும், மண்ணுக்கும் சேவை செய்ய வந்த அரசியல் கழகம். பொறாமை பிடித்த பலர் நம் மீது விமர்சனங்களை முன்வைப்பர். அத்தகைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கு தமிழர்கள் யாருக்கு, எந்த பிரச்சனை என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தோழர்கள் அவர்களுக்கு முன் நின்று உதவ வேண்டும், என்று தெரிவித்தார்.