தேதி: 04-04-2025
பெறுநர்,
திரு.R.K.செல்வமணி அவர்கள்,
FEFSI,
சென்னை.
அன்புள்ள சகோதரர் திரு. R.K.செல்வமணி அவர்களுக்கு,
வணக்கம்,
என் பெயர் தாங்கி தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிப்பது எனது கடமை...இறைவனே இதற்கு சாட்சி....
தங்களது நண்பரும் எனது கணவரும் ஆகிய திரு.கதிரேசன் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளர் பதவியில் இருப்பதால்,எங்கள் நிறுவனம் சம்மந்தப்பட்ட பிரச்சனையை அவர் பேசினால், நீங்கள் கூறியது போல் பதவியை தவறாக பயன்படுத்துவது போல் சித்தரிப்பீர்கள் என்ற காரணத்தினாலும், பெற்ற கடன்களுக்கு நானும் பதில் அளிக்க வேண்டும் என்ற சூழ்நிலையிலேயே Five Star Creations சார்பாக நான் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டேன்...எங்கள் சங்கத்துக்கு நான் வர,என் மன உளைச்சலை தங்களுக்கு விளக்க நான் யாரையும் அழைத்து வர வேண்டிய அவசியம் எனக்கில்லை, அங்கிருந்த அனைவரும் தயாரிப்பாளர் சங்க பதவிகளில் இருப்பவர்களே எனவும், நான் வந்திருந்த போது நடிகர் சங்கம் வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரிந்தும் என்னை வம்பிழுக்கும் நோக்கம் என்ன???அன்றைய நாளில் நீங்கள் தந்தி TV யில் அளித்த பேட்டிகளை எடுத்துப் பாருங்கள்.சுய ஒழுக்கம் பற்றியும்,முன்பணம் வாங்கிய நடிகர்களை பற்றியும் தாங்கள் பேசியதை கேட்டு நீதி கிடைக்கும் என்று இதுநாள் வரை காத்திருந்தேன்
தாங்கள் 30.03.2025 அன்று அளித்த பேட்டியில் நடிகர் சங்கத் தலைவர் தங்களிடம் கூறியதாக பேசியது, எங்கள் சுய மரியாதையை தாக்கியது..அதனால் வந்த வலிகளின் வரிகளே எனது பதிவு.நடிகர் சங்க உறுப்பினர்கள் வட்டிக்கு கடன் வாங்க அதற்கென வேறு அமைப்புகள் உள்ள போது தயாரிப்பாளர்களை ஏன் நாடவேண்டும்...தாங்கள் கூறுவது போல் கடன் பெற்றவர்களிடம் நான் கூற முடியாது, வந்து நடித்து தருமாறு தங்கள் நண்பர் திரு.கதிரேசன் முதலில் வேண்டுகோள் வைத்து மன்றாடி நின்றது அனைவரும் மறந்துவிட்டீர்களா???? பெற்ற முன் பணத்திற்கு நடித்து தருவதே நியாயம் என்று எந்த சங்கத் தலைமைகளுக்கும் தெரியவில்லையா?
நடிகர் திரு.தனுஷ் அவர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுக்கு Five Star Creations மட்டும் முதல் காரணம் அல்ல என்று தங்களுக்கு தெரியாதா???...என்ன நடந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியவரும்...புதிய அரசியலை புகுத்தும் நோக்கம் என்னுடையது அல்ல.எங்கள் மீதான குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கவே சபையில் நடந்ததை கூறினேன். Five Star Creations சார்பாகவே நான் சபைக்கு வந்தேனே தவிர தாங்கள் எழுதியது போல் என் கணவரின் வேதனைக்கு சாட்சி சொல்ல நான் வரவில்லை என்று தங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்....எனது கணவரின் நற்பெயரை கெடுக்கவே தங்களின் இந்த நாடகம் என்று தெளிவாகத் தெரிகிறது...
சகோதரி என்று தொடங்கிய தங்கள் கடிதம் இறுதியில் மிரட்டும் பாணியிலே உள்ளது...அன்று சபையில் நடந்ததும் இதுவே...ஒரு பிரச்சனையை பேசும் இடத்தில் தயாரிப்பாளர் சங்க அனைத்து பிரச்சனைகளையும் இழுத்து வந்து தயாரிப்பாளர்களை திசை திருப்பும் நோக்கம் யாருடையது என்று தெரியவில்லையா..? எங்கள் நிறுவனம் பெறும் தீர்ப்பு, அனைத்து முன்பணம் கொடுத்து காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்குமானது. என் கணவருக்கும் உங்களுக்கும் நடக்கும் அமைப்பு சார்ந்த பிரச்சனைகளில் எங்களை பலியாக்காமல், நடுநிலை தவறாமல் இருக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Five Star Creations
பங்குதாரர்
கலைச்செல்வி