நடிகர் ரவிக்குமார் மறைவுக்கு , இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மறைந்த மாமேதை இயக்குநர் சிகரம் திரு கே. பாலசந்தர் அவர்களால் ‘அவர்கள்’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ரவிக்குமார் ஆவார். இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்து ஏறுமுகம் கண்டவர்.

சின்னத்திரையிலும் நடித்து அவரது முத்திரையை பதித்தவர் ரவிக்குமார். அவரது மறைவு என்னுடைய மனதை வாட்டுகிறது. அவருடைய இறப்பு திரையுலகிற்கு ஒரு பெரும் இழப்பாகும்.

அவரை இழந்து வாடக்கூடிய அவருடைய இல்லத்தாருக்கும், கலையுலகத்தை சேர்ந்த ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

T. ராஜேந்தர், எம்.ஏ.
‍‍- இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here