“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை T.J.பானு நடிக்கும் “அந்தோனி” படப்பிடிப்பு, இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்தது.

யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகிவரும் இப்படம் சென்ற மாதம் பூஜை போடப்பட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. கயல் வின்சன்ட், T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிருந்து நிழல்கள் ரவி, அருள்தாஸ் போன்ற நடிகர்கள் என இரு நாட்டினரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவர் இணைந்து இயக்குகின்றனர். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்ய, “சித்தா”திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான சுரேஷ் A. பிரசாத் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குனராக கலா மோகனும் பணியாற்றுகின்றனர். இத்திரைப்படமானது இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகிறது என்பது சிறப்பம்சமாகும்.

ஓசை பிலிம்சி



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here