இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண நாள் பரிசாக அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

அது குறித்து அவர் பேசும் போது,

“எனக்குத் திருமணம் ஆகி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 52 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சினைகள் இருந்துள்ளன.நான் அவளை எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன். தொல்லைகள் கொடுத்திருக்கிறேன். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு பெண் என்னுடன் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறாள் மகிழ்ச்சியாக.அதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் மனைவிக்குப் பரிசு கொடுப்பது எல்லாம் சாதாரணமான விஷயம் . ஆனால் இந்த 52 ஆண்டு கால வாழ்க்கையை நினைத்து என் மனைவிக்கு நான் ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்திருக்கிறேன்,அவளது மகிழ்ச்சிக்காக.இதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்”என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here