தேதி : 10.05.2025
பத்திரிகை செய்தி
26 உயிர்கள்….
இன்று 140 கோடி மக்களின் மனதை துடிக்க, துவளச் செய்திருக்கிறது. ஆயினும் கட்டுப்பாட்டில் ஒன்றாய் ஒற்றுமையாய் நிற்கிறது. உணர்ச்சிப்பெருக்கால் மட்டுமின்றி, எதிரியின் நகர்வை தீவிரமாய் கவனித்து ஆழ ஆராய்ந்து பதிலடி கொடுத்துவிடுகின்றன நம் தேசத்தின் முப்படைகளும்.. முடிவு செய்யும் அரசும்…
இறையாண்மை காக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கவசமாய் உயர்ந்து நிற்கும் முப்படை வீரர்களுக்கும் ஒன்றிய அரசிற்கும் 140 கோடி மக்களின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி சொல்கிறது.
அரசின் வழிகாட்டுதலை கடைபிடிப்போம். வீரர்களுக்கு பக்கபலமாய் நிற்போம். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் தடையாய் ஆட்டமாடும் தீவிரவாதத்தை வேரறுப்போம்.

(M.நாசர்)
தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here