Passion Studios சுதன் சுந்தரம் & G.ஜெயராம் இணைந்து வழங்கும், இயக்குநர்
பிரவீன் இயக்கும், திரைப்ப்படம் “போத்தனூர் தபால் நிலையம்” !

மனதை கவரும் தரமான படைப்புகளை தருவதை, லட்சியமாக கொண்டிருக்கும் Passion Studios நிறுவனம், தென்னிந்திய திரையுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “சீதக்காதி, அந்தகாரம், என்னங்க சார் இங்க சட்டம்” திரைப்படங்கள் எல்லோரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. திரைக்காதலர்களை கவரும் வகையில் அடுத்தடுத்து ஆச்சர்யகரமான படைப்புகளை உருவாக்கி வருகிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு, “போத்தனூர் தபால் நிலையம்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் & G.ஜெயராம் இப்படத்தை தயாரிக்கின்றனர். மூன்று பாகங்கள் கொண்ட கதைகள் இணையும் சஸ்பென்ஸ், க்ரைம், விசாரணை திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.

இதன் முதல் பாகம் 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், போத்தனூர் தபால் நிலையம் பின்னணியில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. படக்குழு இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டது. விரைவில் முதல் பாகத்தினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்று பாகத்திற்கான படப்பிடிப்பை ஜனவரி 2022 ல் துவங்கி ஒரே கட்டமாக நடத்தவுள்ளனர்.

இந்திய திரை உலகில் முதல்முறையாக, தபால் நிலைய பின்னணியில் உருவாகும் முதல் படம் இதுவாகும். 1990 காலகட்டத்தில் நடக்கும் கதையென்பதால், அக்காலத்தை திரையில் கொண்டுவர, கலை இயக்குநர் குழுவும், படக்குழுவும் மிகவும் கவனமுடன் நுணுக்கமான விவரங்களுடன், கடுமையாக உழைத்து வருகின்றனர்.

அறிமுக இயக்குநர் பிரவீன் இப்படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். அஞ்சலி ராவ் நாயகியாக நடிக்கிறார். 75 க்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் கோயம்புத்தூரை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட் நடிகர்கள். பல கட்ட ஆடிசனுக்கு பிறகே, இந்த நடிகர்கள் இப்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இயக்குநர் பிரவீன் அவர்கள் VFX மற்றும் அனிமேஷன் துறையில் 13 வருட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது. சில ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘கோச்சடையான்’ படத்தில் டெக்னிகல் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Passion Studios Sudhan Sundaram & G Jayaram presents Praveen directorial
Pothanur Thabal Nilayam

Passion Studios’ passion for creating unique content-driven movies has made it one of the celebrated production houses in the South Indian industry. Moreover, the films like Seethakadhi, Andhaghaaram, Ennanga Sir Unga Sattam produced by this banner are garnering beautiful response in every home. The Production House that has already lined up a wide array of promising projects is all set to amuse the film buffs with its new movie titled ‘Pothanur Thabal Nilayam’, directed by Praveen and produced by Sudhan Sundaram and G Jayaram of Passion Studios. It’s a trilogy based on Period-Suspense-Crime-Investigation Thriller.

The first part is set in the year November 1990, where the entire story will be a 2-day incident in the backdrops of Pothanur Thabal Nilayam (Pothanur Post Office). The crew has already completed the shooting of first part, which will have its release soon. The team is planning to complete the shoot of second and third part in a stretch from January 2022.

This is the first-ever time in Indian industry, where a movie is made with post office as the central backdrop. Since, the story owns ‘Period’ elements with the premise of the year 1990, lots of efforts have been exerted by the art department to offer precise authenticity in visuals.

Debutant filmmaker Praveen also plays the lead role in this movie and Anjali Rao is the heroine. Around 75 newcomers will be seen playing prominent characters in this movie. Most of them are theater artistes in and around the Coimbatore region. They were selected for the movie after a long process of auditioning. It is worth mentioning that filmmaker Praveen has 13 years of experience in the world of VFX and Animation. He has worked for several Hollywood movies and was the technical director of Superstar Rajinikanth’s movie Kochadaiyaan.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here