Mr Chandramohan K, the founder and chairman of NTC Group, is a pioneer and a visionary in the Indian logistics space. He has led his organization to become the single largest renewable energy logistics provider in India. Besides his extraordinary professional feats in the logistics, engineering and renewable energy spheres, Mr Chandramohan also takes persistent efforts to improve the health and wellbeing of the impoverished in society. In recognition of his remarkable feats, Mr Chandramohan is conferred the Life Time Achievement Award by Saveetha Institute of Medical and Technical Sciences during their Founder’s Day event on Nov 15th.

கனரக சரக்கு போக்குவரத்து, பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான  முனைவர்.க.சந்திரமோகன் அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை போற்றும் வகையில், சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சவீதா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் எம்.என்.வீரையன் அவர்களின் சேவையைப் பாராட்டி வாழ்த்தும் விதமாக, நிறுவனர் தினவிழா 15.11.2021 அன்று கொண்டாடப்பட்டது. சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கனரக சரக்கு போக்குவரத்து துறையில் நாட்டிலேயே முன்னோடியாக செயல்பட்டு வரும் பிரபல NTC குழுமத்தின் நிறுவனர் மற்றும்  தலைவர் முனைவர்.க.சந்திரமோகன் அவர்கள், தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் தனது நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய கனரக சரக்கு போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொறியியல் துறைகளில் முன்னணி நிறுவனமாக உருவாக்கியுள்ளார். மேற்க்கூறிய துறைகளில் பலவித புதுமைகளை புகுத்தி  சாதனைகளைப் படைத்துள்ள முனைவர்.க.சந்திரமோகன், சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும், ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளை கவுரவிக்கும் வகையில், சவீதா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவில், ……. அவர்கள், முனைவர்.க.சந்திரமோகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார்.

மேலும், இந்த விழாவில் பிரபல பேச்சாளரும், பேராசிரியருமான முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்து கொண்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் தரும் வகையில், சிறப்புரையை வழங்கினார்.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here