Following her last release in Tamil, ‘Kolaiyuthir Kaalam’ starring Nayanthara, the serene beauty Bhumika Chawla is back again with the Udhaynidhi Stalin starrer ‘Kannai Nambathey’. Describing her role in the film she says, “I play the central character in the film that’s a crucial part in moving the story forward. Also, to be very honest I’m bored playing the girl-next-door or goody-goody- roles for over two decades, which is exactly why I chose to do something different in ‘Kolaiyuthir Kaalam’. I don’t mind playing negative characters. As an actor, one should explore different territories. Tamil Cinema is delivering some amazing content and I hope to work more often here. I do not wish to give away much about my role in ‘Kannai Nambathey’, but I can assure you that you’ll see a different me exploring different dimensions.” 


When questioned about what kept her going during the Pandemic, she replies with a subtle smile saying, “I do Yoga regularly and meditate for a calm and composed mind and lifestyle. Also, I live one day at a time, try to keep myself happy and stay busy.” 
Bhumika Chawla, who was recently seen shooting in Chennai for an upcoming film considers Chennai her second home and regards the love and warmth of people in the city as a blessing. The svelte actress recently had two blockbuster releases in Telugu: Gopichand’s ‘Seetimaar’ and Vishak Sen’s ‘Paagal’ and is eagerly looking forward to her next few interesting projects in Tamil, Telugu and Hindi. 


வித்யாசமான பரிமாணங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் பூமிகா சாவ்லா!
தமிழில் கடைசியாக வெளியான நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் மூலம் பூமிகா சாவ்லா மீண்டும் நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார் .கண்ணை நம்பாதே படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி  விவரிக்கும் அவர், “கதையை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மையக் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். மேலும், உண்மையைச் சொல்வதென்றால், சாதாரண கதாபாத்திரங்களில்  நடிப்பதில் எனக்கு அலுப்பாக இருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இது போன்ற  வேடங்களில் நடித்துள்ளேன், அதனால்தான் ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான நடிப்பை தேர்வு செய்தேன். எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு கவலையில்லை, ஒரு நடிகராக, வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக வேண்டும் . தமிழ் சினிமா சில அற்புதமான உள்ளடக்கங்களை வழங்குகிறது. இன் தமிழில் அடிக்கடி பல படங்களில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். ‘கண்ணை நம்பாதே’ படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை , ஆனால் வித்தியாசமான பரிமாணத்தில் நான் நடித்திருப்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.”


கொரோனா ஊரடங்கு காலத்தை எப்படி கடந்து வந்தீர்கள்  என கேட்கப்பட்டபோது, புன்னகையுடன் பதிலளித்தார் , “நான் தொடர்ந்து யோகா செய்தேன் ,  அமைதியான மனது மற்றும் வாழ்க்கை முறைக்காக தியானம் செய்து வந்தேன் , மகிழ்ச்சியாக மற்றும் பிஸியாக இருக்க முயற்சி செய்துகொண்டே இருந்தேன் “.
சமீபத்தில் வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் சென்னையில் காணப்பட்ட பூமிகா சாவ்லா, சென்னையை தனது இரண்டாவது வீடாக கருதுகிறார், மேலும் நகரத்தில் உள்ள மக்களின் அன்பையும் அரவணைப்பையும் ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறார். பூமிகா சாவ்லா சமீபத்தில் தெலுங்கில் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களான  கோபிசந்தின் ‘சீட்டிமார் ‘ மற்றும் விஸாக் சென்னின் ‘பாகல்’ படங்களில் நடித்திருந்தார் .தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தனது அடுத்த சில சுவாரஸ்யமான படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here