S.S. Rajamouli to present the vision of Brahmāstra with Amitabh Bachchan, Nagarjuna Akkineni, Karan Johar, Ranbir Kapoor, Alia Bhatt, Ayan Mukerji and Fox Star Studios in Tamil, Telugu, Kannada and Malayalam.

S.S. Rajamouli has announced that he will present magnum opus, Brahmāstra, in four South languages in Tamil, Telugu, Kannada, and Malayalam worldwide. Such is the monumental vision and scale of Brahmāstra that top powerhouses will unite to present this movie to wider markets.

Produced by Fox Star Studios, Dharma Productions, Prime Focus and Starlight Pictures the magnum opus will release theatrically on 09.09.2022 across 5 Indian languages – Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada

@ssrajamouli @SrBachchan #RanbirKapoor @aliaa08 @iamnagarjuna @RoyMouni #AyanMukerji @karanjohar @apoorvamehta18 @FoxStarHindi

பிரம்மாஸ்திரம் பாகம் 1 படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி வழங்குகிறார் !

பிரம்மாஸ்திரம் படத்தின் பயணம் மிகப்பெரும் நிகழ்வுடன் துவங்கியுள்ளது. இப்படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி, அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி மற்றும் Fox Star Studios உடன் இணைந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடுகிறார்.

18 டிசம்பர் 2021 ஹைதராபாத்: சில நட்புகளும், சில படங்களும் உண்மையிலேயே சிறப்பானவை. SS.ராஜமௌலியின் பெரும் காதலால் உருவான உழைப்பை, பாகுபலி படத்தை இயக்குநர் கரண் ஜோஹர் பெருமிதத்துடன்  வழங்கினார். அந்த நட்பின் பெருமையை இன்று நாம் மீண்டும் காண்கிறோம். இன்று, SS.ராஜமௌலி, அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படைப்பான “பிரம்மாஸ்திரம்” படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய புராணங்கள் மற்றும் நவீன உலகம் என இரண்டும் கலந்த ஒரு காவியமாக பிரம்மாஸ்திரம், 2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின மோஷன் போஸ்டர் உடன் வெளியான, படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு, பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

வரும்  செப்டம்பர் 9, 2022 அன்ற இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளது. மேலும் இந்த பிரம்மாண்டமான  மற்றும் பெரிய பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியிடுவதற்காக இந்தியாவின் முன்னணி  நட்சத்திரங்கள் இணைய  உள்ளனர். மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின்  முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிக்கின்றனர். அவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, மௌனி ராய் மற்றும் அமிதாப்பச்சன் என உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் முதல் முறையாக இணைகின்றனர், இவர்கள் அனைவரும் படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் தற்போது இயக்குநர் SS.ராஜமௌலி இணைந்தது, இதன் பெருமையை மேலும் அதிகரித்துள்ளது. பாகுபலி போன்ற திரைப்படத் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான ஒரு இயக்குனர் இந்த படத்தை வெளியிடுவது கூடுதல் சிறப்பு. 

இது குறித்து SS.ராஜமௌலி கூறுகையில், 
 பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். பிரம்மாஸ்திரம் படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். 

இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து  உங்கள் மனதைக் கவரும் வைகையில் உருவாக்கபட்டுள்ளது! 

எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும்.  அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்,  மேலும் பாகுபலிக்குப் பிறகு Dharma Productions உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, Fox Star Studios உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி கூறும்போது, இயக்குநர் அயன் மற்றும் பிரம்மாஸ்திரம் திறமையான குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிக அருமையான அனுபவம். பண்டைய இந்தியா மற்றும் நவீன இந்தியா இரண்டின் கலவையாக உருவான இந்தப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் இது போன்ற ஒரு மிகப்பிரமாண்ட திரைப்படத்தில் ஒரு பகுதியாக நானும் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. இயக்குநர் திரு.ராஜமௌலி இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையான விசயம். மேலும் 2022 ஆம் ஆண்டில் எனது ரசிகர்களுக்கு இப்படத்தை வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இயக்குநர் கரண் ஜோஹர் கூறியதாவது…
“பிரம்மாஸ்திரம் மிகப்பெரும் ஆச்சர்யங்கள் தரும், வியத்தகு படைப்பாகும். இந்த தொலைநோக்கு திரைப்படத்தில் நானும் பாங்கேற்றிருப்பது பெருமை. பிரம்மாஸ்திரம் என்பது அயனின் பார்வை, அவர் வளர்த்த குழந்தை. இப்படம் மிகப்பிரமாண்டமானது உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் தகுதி கொண்டது. பாகுபலி திரைப்படம் பல சாதனைகளை முறியடித்தது மட்டுமல்லாமல், இட மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து நமது முதல் உண்மையான தேசியத் திரைப்படமாக உயர்ந்தது, அதே போலான உயரத்தை இந்த பிரம்மாஸ்திரம் படமும் அடைய, இப்படத்தில் இணைவதில் இயக்குநர் ராஜமௌலியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை! இது என் மனதிற்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது, அவர் இப்போது இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது என் நம்பிக்கையை பலப்படுத்துகிறது.

இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில், “பிரம்மாஸ்திரம்” நான் பல ஆண்டுகளாக கண்டு வரும் கனவு. இது ஒரு மூன்று பாகங்கள் அடங்கிய தொகுப்பு. இதுவரையிலான பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. இந்தப் படத்திற்காக நான் அனைத்தையும் தந்திருக்கிறேன். நான் தொடர்ந்து இதில் என்னால் முடிந்த பணியினை செய்து கொண்டே இருப்பேன். எஸ்.எஸ்.ராஜமௌலி சார் போன்ற ஒரு அற்புதமான வழிகாட்டி இந்தப்படத்திற்குள் வருவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். அவரது பாகுபலி திரைப்படம் தான் எனது கனவை தைரியமாக தொடர எனக்கு நம்பிக்கை அளித்தது. மேலும் அவரது பெயர் பிரம்மாஸ்திரம் படத்துடன் இணைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

பிரம்மாஸ்திரம் படம் குறித்து…

பிரம்மாஸ்திரம் – டிரையாலஜி, 3-பகுதிகள் கொண்ட திரைப்படமாகும். இது இந்தியாவின் முதல் அசல் பிரபஞ்சத்தின் தொடக்கமாகும் – அஸ்தராவர்ஸ் அறிமுகப்படுத்தும். இது ஒரு புதிய சினிமா அனுபவத்தை தரும், இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகில் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோரின் நட்சத்திரக் கூட்டணியின் நடிப்பில், இந்த பிரமாண்ட இந்திய படைப்பு, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 இந்திய மொழிகளில் 09.09.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here