22-ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா

கடந்த 21 ஆண்டுகளாக ஜெயா டிவி வெற்றிகரமாக தயாரித்து வரும் நிகழ்ச்சி “மார்கழி உத்சவம்” .

இம்முறையும் 22 ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா சிறப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது .தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை தினமும் மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .

இந்த நிகழ்ச்சியின் தனி சிறப்பு வழக்கமான கச்சேரியாக இல்லாமல் ஒவ்வொரு கச்சேரியும் ஒரு தீம் பேஸ்டாக (Theme based ) இருக்கும். அதாவது ஒவ்வொரு கச்சேரியும் ஒரு இசை மேதையின் பாடல்கள் (பாபநாசம் சிவன் )அல்லது ஒரு கடவுளைப் பற்றியே அமைந்திருக்கும். உதாரணத்துக்கு (“வா வேலவா” ) ஜெயா டிவியின் இம்மாதிரியான கச்சேரிகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது .

பாடகிகள் “பத்மபூஷண் திருமதி சுதா ரகுநாதன்” மற்றும் திருமதி ‘மஹதி’ – வாய்ப்பாட்டு

திரு.லால்குடி கிருஷ்ணன் மற்றும் திருமதி லால்குடி விஜயலட்சுமி- வயலின்

“கலைமாமணி ராஜேஷ் வைத்யா”- வீணை

“கலைமாமணி விசாகா ஹரி” – சங்கீத உபன்யாசம்

திருமதி ஜே.பி கீர்த்தனா- வாய்ப்பாட்டு ,போன்ற பல கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள்.

ஜெயா டிவியில் தினமும் மாலை 5:30 மணிக்கும் இதன் மறு ஒளிபரப்பு மறுநாள் காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பாடகி திருமதி, சுசித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here