காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது.

டைரக்டர் சுசீந்திரன் இணை இயக்குனரான அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக AGR RIGHT FILMS தெரிவித்துள்ளது.

தற்போது CHENDUR FILMS INTERNATIONAL “COMMON MAN” என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லவே, சசிகுமார் எதுவானாலும் FILM CHAMBER வழியாக நீங்கள் தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS.. FILM CHAMBER-ஐ அணுகவே, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. பதில் வர தாமதமான நிலையில்,

CHENDUR FILMS INTERNATIONAL நிறுவனம் “COMMON MAN” என்கிற தலைப்பில் பட டீசர் வெளியிட்டுவிட்டது.

இதன் பிறகு AGR RIGHT FILMS.. சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.

AGR RIGHT FILMS “COMMON MAN” என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிசான்று வழங்கக் கூடாது என்று Censor Board-இடம் சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியது.

அதற்கு சென்சார் போர்ட் இப்பொழுது, ‘காமன்மேன்’ டைட்டிலை AGR RIGHT FILMS நிறுவனத்திற்கு முறையாக சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இப்படத்தின் மோஷன் போஸ்டர் motion poster விரைவில் வெளிவரும்.

இதனால், அறிவிப்பு வெளியான சசிகுமார் பட டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here