If you are a fan of romantic songs, your surely can’t give Megham a miss! The first song which features in romantic comedy Hey Sinamika is sung and composed by Govind Vasantha and written by Madhan Karky.

While you listen to this upbeat number, here’s what director Brinda master has to say about getting Govind on board as the composer. “We knew him as the lead vocalist and mentor of Thaikudam Bridge band. We also loved the Malayalam Fish rock song of Thaikudam Bridge which he had performed on stage umpteen times and wanted to make a song on that tune and use the same energy of the song. Then overnight Govind became a sensation in Tamil film industry with the film ‘96. Our decision to go with Govind became all the more convincing after the release of the film 96. And we went ahead and used the Fish rock song – which is the first song in the film Megham”, she shares.

Talking about the song Dulquer says, “Megham has a very upbeat and fresh vibe to it. It’s a high energy number and Aditi and I had a blast dancing on this song to Brinda Master’s choreography.”

Aditi adds, “Megham is a peppy number and promises to instantly boost your mood. The music by Govind Vasantha is just phenomenal. Dulquer and I had a great time shooting for this song.”

Hey Sinamika marks the directorial debut of ace-choreographer Brinda master and stars Dulquer Salmaan, Aditi Rao Hydari and Kajal Aggarwal in lead roles.

Produced and Presented by Jio Studios, associate producer Global One Studios, Hey Sinamika is slated to release in cinemas on 3rd March 2022 in Tamil, Telugu, Malayalam and Kannada.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கியுள்ள ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் தோன்றும் ‘மேகம்’ பாடல் வெளியீடு

நீங்கள் காதல் கீதங்களின் ரசிகராக இருந்தால், நிச்சயமாக உங்களால் ‘மேகம்’ பாடலை மிஸ் செய்ய முடியாது. நகைச்சுவை கலந்த காதல் படமான ‘ஹே சினாமிகா’-வில் இடம்பெறும் இந்த முதல் பாடலை கோவிந்த் வசந்தா பாடி இசையமைத்துள்ளார், வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகியுள்ளார்.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘மேகம்’ பாடல் குறித்தும், கோவிந்த் வசந்தா குறித்தும் பேசும் இயக்குநர் பிருந்தா மாஸ்டர், “தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் முன்னணி பாடகராகவும் வழிகாட்டியாகவும் நாங்கள் அவரை அறிந்திருந்தோம். மேடையில் அவர் பலமுறை வழங்கிய தாய்க்குடம் பிரிட்ஜின் மலையாள ஃபிஷ் ராக் பாடலை நாங்கள் மிகவும் விரும்பினோம், அந்த டியூனில் ஒரு பாடலை உருவாக்கி பாடலின் அதே ஆற்றலைக் கொண்டு வர விரும்பினோம். ‘96’ படத்தின் மூலம் ஒரே இரவில் தமிழ் திரையுலகில் பிரபலமான கோவிந்த் வசந்தா மேகம் பாடலை உற்சாகமிக்க கீதமாக உருவாக்கியுள்ளார். படத்தின் முதல் பாடல் இதுவாகும்” என்றார்.

பாடலைப் பற்றி பேசிய துல்கர், “மேகம் மிகவும் உற்சாகமாக இருப்பதோடு புதிய அதிர்வையும் ஏற்படுத்துகிறது. அதிதியும் நானும் இந்த பாடலில் பிருந்தா மாஸ்டரின் நடன அமைப்பில் ஆடியுள்ளோம்,” என்றார்.

அதிதி கூறுகையில், “துடிப்பான பாடலான மேகம் உங்கள் மனநிலையை உடனடியாக பரவசமடைய செய்யும். கோவிந்த் வசந்தாவின் இசை மிகவும் அபாரம். இந்தப் பாடலின் படப்பிடிப்பில் நானும் துல்கரும் ஈடுபாட்டுடன் பணியாற்றினோம்,” என்றார்.

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ஜியோ ஸ்டுடியோஸ், இணை தயாரிப்பாளர் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ‘ஹே சினாமிகா’, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 2022 மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here