Greetings to all,
I would like to introduce myself as the producer, director, and lead actor of “Pothanur Thabal Nilayam”, which premiered recently on the AHA Tamil OTT platform and garnered a good response. Recently, I came across a person named ‘Sathish’ slandering me with allegations that have no proof, which has left me in deep depression.
In 2015, I started the Pre-production works of this movie, during which, Sathish approached me with an earnest desire to work as art director. He obtained an advance amount of Rs. 1 Lac in January 2015 and promised of erecting substantial set works at lower and affordable budget.
After a few months, the first phase of erecting a huge post office set work commenced. Right from the beginning, the entire process has been sluggish and outputs were poor. Later, I got to know that he had already spent the advance amount I gave him, which has made the speed and quality of work more pathetic.
This left both of us in severe arguments, and he left the project, even without completing 25% of the set work he promised and didn’t return back my money. I tried reaching him several times over the phone, which was completely useless.
Later, my team and I worked a lot in continuing to erect the set works and completed shooting the entire portions in that backdrop as planned. After getting to know this scenario, Sathish approached me on the final day shoot of Post-Office schedule. He apologized for his insincere work, promised that he would erect the next set of works with top-notch quality, and asked for some advance cash.
This distinctly revealed his intention of looting the money from me, and I didn’t want to be victimized again. I warned him not to visit the shooting spot ever again. Later, me and my team worked very hard on the set works. And now, we are elated to receive positive feedback and reviews for the same after the release. I would like to clearly mention that Sathish has nothing to do with the art direction of this movie.
The person, who didn’t have any communication with me for 5-6 years, suddenly shows up after seeing the positive reception for the movie and is cornering me with unsubstantiated allegations over an incident that never happened at all.
I always believe all human beings are equal. Everyone around me is very well aware about this nature of mine. As such I have never disrespected the portrait of Dr. Ambedkar in any way. But he is alleging me of having thrown his portrait into a dustbin, which is completely untrue. He is doing all this for the sake of grabbing the media attention and public glare.
Henceforth, I request friends from the press and media industry, and my well-wishers not to believe in such rumors.
அனைவருக்கும் வணக்கம் என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை
பெற்றுக்கொண்டிருக்கும் “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
என்னைப் பற்றி சதீஷ் எனும் நபர் சோசியல் மீடியாவில் ஆதாரமின்றி அவதூறு பரப்பி வருவதை கண்டு மிகவும்
மன வேதனைக்கு உள்ளானேன். 2015 இல் இந்த படத்தின் Pre-production வேலைகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது
என் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷன் வேலைகளை செய்து தருவதாக என்னை அணுகினார் சதீஷ். இந்த படத்திற்கு
குறைந்த முதலீட்டில் தரமான செட்டுகளை அமைத்து தருவதாக உறுதி கூறி என்னிடமிருந்து ஒரு லட்ச ரூபாயை
ஜனவரி 2015ல் முன்பணமாக பெற்றார். சில மாதங்களுக்குப் பிறகு படத்தின் முதல் பெரிய Setஆன
போஸ்ட் ஆபீஸ் செட் அமைக்கும் பணி துவங்கியது. ஆரம்பம் முதலே மிகவும் தாமதமாகவும் மற்றும் தறமற்றவாரே
அந்த போஸ்ட் ஆபீஸ் செட்டுகளை
அமைத்துக் கொண்டு இருந்தார். பிறகுதான் தெரியவந்தது நான் கொடுத்த முன்பணத்தை செலவு செய்துவிட்டு
இப்போது கையில் காசு இல்லாமல் இருப்பதை வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கிறார் என்று. இதனால் எங்களுக்குள்
வாக்குவாதம் வர 25% சதவிகிதம் கூட முடியாத அந்த செட்டில் இருந்து எங்கள் முன் பணத்தையும் திருப்பித் தராமல்
வெளியேறிவிட்டார். பலமுறை தொலைபேசியில் அழைத்துப் பேசியும் பலனில்லை.
அதன் பிறகு நானும், என் டீமும்
சேர்ந்து மிகுந்த சிரமப்பட்டு அந்த செட்டை உருவாக்கி ஷூட்டிங் நடத்தி முடித்தோம். படம் நன்றாக வந்து
கொண்டிருப்பதை கேள்விப்பட்ட சதீஷ், போஸ்ட் ஆபீஸ் ஷெட்யூல் கடைசி நாளில் என்னிடம் வந்து நடந்ததற்கு மன்னிப்பு
கேட்டு, அடுத்த செட்டை தரமாக அமைத்து தருவதாகவும் அதற்கு முன்பணம் வேண்டும் என்றும் கேட்டார். அவரது நோக்கம்
பணத்தைப் பெறுவதில் மட்டுமே இருப்பதை அறிந்து கொண்ட நான், ஏமாற தயாராக இல்லை இனி நீங்கள்
இங்கு வர வேண்டாம் என்று கடுமையாக கண்டித்து அனுப்பிவிட்டேன். அதன் பிறகு படத்தில் வரும் அனைத்து
செட்டுகளையும் நானும் எனது டீமும் சேர்ந்து மிகக் கடுமையான உழைப்பால் உருவாக்கியது. இப்போது அதற்கான
அங்கீகாரம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷனுக்கும் சதீஷ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதன் பிறகுஆறு ஆண்டுகாலம் என்னுடன் எந்த தொடர்பிலும்
இல்லாத அவர் படம் ரிலீஸ் ஆகி மக்களால் அங்கீகரிக்கப்படுவதை அறிந்தவுடன் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கூறி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது வைக்கிறார். அனைத்து மனிதர்களும் சமம் என்று நினைப்பவன் நான்.
இது என்னுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும். அப்படிப்பட்ட நான் ஒரு போதும் அம்பேத்கர் படத்தை அவமரியாதை
செய்திருக்க வாய்ப்பே இல்லை. நாங்கள் அம்பேத்கர் படத்தை குப்பையில் போட்டு இருந்ததாக அவர் கூறுவது
தன்மீது மீடியாவின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் கூறும் ஆதாரமற்ற பொய்களே.
தயவுசெய்து பத்திரிக்கை நண்பர்களும், எனது நலம் விரும்பிகளும் இந்த ஆதாரமற்ற பொய்களை
நம்ப வேண்டாமென்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.