NOISE AND GRAINS ‘Ilayaraja’s Concert is set to take place on June 26 (Sunday) at the Velammal Global Campus, Madurai. The show has starting a low entry price is fixed.

NOISE AND GRAINS, AR Rahman’s “NENJE EZHU”, Celebrity Playback Singer Shidsriram’s “ALL LOVE NO HATE” Concert, Playback Singer Hariharan “MADAI THIRANTHU2”, Playback Singers S P B and K. J. Yesudas in Singapore “Voice Of Legend” , Famous playback singers Srinivas and Vijay Prakash performed “MADAI THIRANTHU3” and Rock star Anirudh performed “LIVE IN SINGAPORE” to sweep the minds of music fans.Not only that, but recently, in collaboration with the Tamil Nadu Tourism Development Corporation and the Tamil Nadu Department of Arts and Culture, they have organized the “Namma Oor Thiruvizha” and the Grand “Legend” movie audio launch event.

மதுரையில் “இசையென்றால் இளையராஜா” NOISE AND GRAINS – ன் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

NOISE AND GRAINS நிறுவனம் சமீபத்தில் ராக் வித் ராஜா எனும் இசைஞானி இளையராஜா அவர்களின் வெற்றிகரமான இசை நிகழ்ச்சி நடத்தியதைத் தொடர்ந்து , “இசையென்றால் இளையராஜா ” எனும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஜூன் 26 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் , இசைஞானியின் இசையினை நேரடியாக ரசிக்கும் வகையில் , மிகவும் குறைந்தவிலையில் நுழைவுக்கட்டணம், ஆரம்ப விலையாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

NOISE AND GRAINS நிறுவனம், இசைப்புயல் AR ரஹ்மான் அவர்களின் “நெஞ்சே எழு”, பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமின் “ALL LOVE NO HATE ” இசை நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களின் “மடை திறந்து” , மறைந்த பின்னணி பாடகர் S P B மற்றும் K. J. யேசுதாஸ் இணைந்து சிங்கப்பூரில் “VOICE OF லெஜெண்ட்” , பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்ரீனிவாஸ் , விஜயபிரகாஷ் அவர்களின் “மடை திறந்து” , ராக் ஸ்டார் அனிருத் “LIVE IN SINGAPORE “எனும் நிகழ்ச்சிகளை நடத்தி இசை ரசிகர்களின், மனதை வருடிச்செல்ல வைத்தது. அது மட்டுமல்லாமல் சமீபத்தில் , தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறையுடன் இணைந்து “நம்ம ஊர் திருவிழா” நிகழ்ச்சியும் மற்றும் பிரமாண்டமாய் “லெஜெண்ட்” திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here