ZEE5 has consistently enthralled the audiences with a streak of promising series like Vilangu, Anantham, Karmegam, and many more. Now the reputed OTT platform has announced the second season of its magnum opus Original series ‘Fingertip’.
The series is produced by Arun and George Nambi, and is directed by Shivakar. The series features Prasanna, Regina Cassandra and Aparna Balamurali in the lead roles with Vinoth Kishan, Kanna Ravi, Sharath Ravi, and many more prominent actors as a part of star-cast. With ‘Fingertip’ Season 2 premiering on June 17, 2022, the cast and crew members of this series interacted with the press and media fraternity. Here are the excerpts from this event.
Siju Prabhakaran, ZEE5 Cluster Head, said, “The story revolves around the incidents involving the hazardous outcome of using social media. This is a story that is about the issues that are happening constantly in today’s society. All the characters have delivered spellbinding performances, especially Kanna Ravi has given a tremendous performance. We are eagerly waiting to watch the response for this series. We are happy with the way this series has shaped out. We request everyone to watch this series and support it.”
Kaushik Narasimhan, ZEE5 Content Head said, “Today’s technological advancement and progression has both pros and cons. This series will throw light on this scenario. All the actors have exerted their best and completely transformed into their respective characters for this series. Director has given satisfactory and best work with this series.
Producer Arun said, “Director Shivakar is the reason behind my avatar as producer. I thank the entire cast and crew of this series for making it a special project for me. This series was possible because of the unconditional support and work of the entire crew. I request everyone to support this series.”
Director Shivakar Srinivasan said, “We have completed this series amidst the pandemic crisis. The actors and technicians are the major pillar in making this happen. All the actors in this series have inhaled the soul and essence of their respective characters, and have delivered colossal performances. Both the producers Arun and George Nambi wanted this story to reach the audience as awareness, and henceforth, they came forward to produce it. The suggestions and valuable opinions from ZEE5 shaped this series to a greater magnitude. Rohit is the reason behind the characterizations’ dialogues and scenes getting a perfect output. This is a series with a technology-based-thriller premise. Our day-to-day involvement with these technological factors has been depicted in the series. I believe this series will be liked and appreciated by everyone.”
Actor Prasanna said, “The Fingertip Season one was so intense and made in such a way that it impressed audiences from walks of life. When the director narrated the script to me, I felt it was a good chance to prove my potential as there was more scope for my characterization. Currently, we are in such a situation that we cannot live without mobile phones and other technological gadgets. This series delves into the real factors of how strongly technology has kept all of us under its control. This series will throw light on the many unknown facts about the technology and its negative impact of it. I am excited about the release of this series. I am sure that everyone will love and appreciate this series.”
Actress Regina Cassandra said, “This series will be more like real-life situations that we experience in our day-to-day lives. It’s more like seeing the realistic factors from everyone’s perspective. I have performed the role of an actress, and the series delves deep into the problems faced by the respective character. I am sharing screen with Prasanna after 15 years.. I thank ZEE5 for making such unique content-driven stories with an engrossing package.”
Actress Aparna Balamurali said, “I was elated when I got an opportunity to be a part of Fingertip season 2. One needs to possess a lot of courage and boldness to make a series like this. This series will be a reflection of watching real-life incidents on the screens. This is the first time, I am a part of a web series. Director has presented this story perfectly as he narrated. This series will be something that everyone can closely relate to. I request everyone to watch this series and support it.”
Music director Dheena Dhayalan said, “It’s a great delight to be composing music for this series. I thank producers Arun, George, and director Shivakar for making me a part of this series. Everyone in this series has given their best involvement and dedication. I request everyone to watch this series and extend your support.”
Screenplay writer Rohit said, “I loved the first season of Fingertip, and I am exhilarated that I have got an opportunity to write the screenplay for the second season as well. Every crewmember has extended a complete support in shaping this series excellently. I request everyone to watch this series and extend your support.”
Actor Vinod Kishan said, “It’s been a great pleasure working with director Shivakar. My character in this series will be someone that many would have encountered in their real lives. Undoubtedly, many sequences in this series will be reflected by audiences, as there would be moments experienced by them in their real lives. I request everyone to support me.”
Actor Kanna Ravi said, “I thank the director for trusting me. The character that the director has given me in this series is very close to my heart. I wanted to share the screen with all the artistes in this series, and I am glad that it happened. Without the complete involvement of the crew, this series would not have got completed. I thank the audiences in advance for their great support for this series.”
Actress Divya Duraisamy said, “I am glad that I am a part of this series. It was a great experience to work with an amazing director Shivakar. ZEE5 has been consistently churning out interesting and gripping series. Fingertip season 2 will be the latest one to join this league. I request everyone to watch it and share your support.”
ஜீ5 வழங்கும் “ஃபிங்கர்டிப் சீசன் 2” பத்திரிக்கையாளர் சந்திப்பு !
ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்யவுள்ள அடுத்த படைப்பான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரின் செய்தியாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.
ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ வை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர், சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, மாரிமுத்து, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி, திவ்யா துரைசாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி இந்தத் தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
சிஜு பிரபாகரன், ஜீ5 கிளஸ்டர் ஹெட் கூறியதாவது..
சமூக வலைதளம் மற்றும் அதன் ஆபத்தை பற்றி எடுக்கும் தொடர்கள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். தற்போதைய டிஜிட்டல் உலகில் நடக்கும் சம்பவங்களை சுற்றியே இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடித்துள்ள நடிகர் கண்ணா ரவி சிறப்பான நடிப்பை அளித்துள்ளார். இந்த தொடரின் இறுதி பதிப்பை பார்த்த பிறகு நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். தொடர் மிக நன்றாக வந்துள்ளது. நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும்.
ஜீ5 தளம் சார்பில் கௌசிக் நரசிம்மன் கூறியதாவது..
இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் எவ்வளவு நல்லதோ, அதே அளவு ஆபத்தும் அதில் இருக்கிறது என்று கூறுவதே இந்த தொடர். அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். இயக்குநர் சிறப்பான தொடரை கொடுத்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
தயாரிப்பாளர் அருண் கூறியதாவது..,
இயக்குனர் சிவாகர் தான், நான் தயாரிப்பாளராக மாற காரணம். இந்த தொடரில் பணிபுரிந்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்ப குழுவின் முழு முயற்சியில் தான் இந்த தொடர் உருவானது. அனைவரும் உங்களது ஆதரவை தர வேண்டும்.
இயக்குனர் சிவாகர் ஶ்ரீனிவாசன் கூறியாதவது..,
கொரோனா தடங்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் முடித்துள்ளோம். அதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் காரணம். படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அவர்களது கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜீ5 சார்பில் வந்த பல பரிந்துரைகள் இந்த தொடரை செதுக்கியது. இந்த தொடரில் கதாபாத்திரங்களின் வசனமும், காட்சிகளும் சிறப்பாக அமைய காரணம் எழுத்தாளர் ரோஹித். இந்த தொடர் ஒரு தொழில்நுட்ப திரில்லர், நாம் தினமும் காண்பதை திரையில் காட்ட முயற்சித்து இருக்கிறோம். உங்களுக்கு இந்த தொடர் பிடிக்கும் என நம்புகிறேன், உங்கள் ஆதரவு தேவை. நன்றி.
நடிகர் பிரசன்னா கூறியதாவது..,
ஃபிங்கர் டிப் முதல் சீசன், மிகவும் ஆழமாகவும், ஈர்க்கும் வகையில் இருந்தது. அந்த தொடரின் இயக்குனர் என்னை அணுகி, இந்த கதையை சொன்ன போது எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிந்தது. அனைவராலும் மொபைல் இல்லாமல் இருக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். இன்றைக்கு தொழில்நுட்பம் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த தொடர். இந்த தொடரின் வெளியீட்டில் நான் ஆர்வமாய் இருக்கிறேன். இந்த தொடர் உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறியதாவது..,
இந்த கதை நாம் தினமும் கடந்து செல்லும் விஷயத்தை திரையில் பார்ப்பது போல் இருக்கும். ஒரு விஷயத்தை எல்லோருடைய பார்வையில் பார்ப்பது போல் இருக்கும். இந்த சீரியலில் நான் நடிகையாகவே நடித்துள்ளேன். நடிகைக்கு இருக்கும் சிக்கல்களை காட்டும் கதாபாத்திரமாக அது இருக்கும். பல சிக்கல்களை கடந்து இந்த தொடரை நாங்கள் எடுத்துள்ளோம். நான் 15 வருடங்கள் கழித்து பிரசன்னா உடன் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இது போன்ற கதைகளை எடுத்து, அதை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சிக்கும் ஜீ5-க்கு நன்றி.
நடிகை அபர்ணா பாலமுரளி கூறியதாவது..,
ஃபிங்கர் டிப் தொடருக்கு என்னை அழைத்த போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது போன்ற கதைக்களத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். பல நிஜ சம்பவங்களை திரையில் பார்ப்பது போல் இந்த தொடர் இருக்கும். இது எனது முதல் வலைத்தொடர். இயக்குநர் இந்த கதையை சிறப்பாக சொல்லியுள்ளார், இந்த கதை எல்லோரும் சம்பந்தபடுத்தி கொள்ளும்படியான ஒரு கதையாக இருக்கும். இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.
திரைக்கதை எழுத்தாளர் ரோஹித் கூறியதாவது..,
இந்த தொடரின் முதல் சீசன் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் இரண்டாவது பாகத்தை நான் எழுதுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த தொடரில் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நீங்கள் இந்த தொடரை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இசையமைப்பாளர் தீனதயாளன் கூறியதாவது..,
இந்த தொடரில் இசையமைப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குனருக்கு நன்றி. தயாரிப்பாளர் அருண் மற்றும் ஜார்ஜ் என்னை நம்பியதற்கு நன்றி. இதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். தொடரைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
நடிகர் வினோத் கிஷன் கூறியதாவது..
இயக்குனர் சிவாகர் உடன் பணிபுரிவது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம், எல்லோரும் நிஜ வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். அது கண்டிப்பாக அதிர்வலையை ஏற்படுத்தும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை. நன்றி.
நடிகர் கண்ணா ரவி கூறியதாவது..,
என்னை நம்பிய இயக்குனருக்கு நன்றி. இந்த கதாபாத்திரம் எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்கள் உடனும் நான் பணியாற்ற விரும்பினேன், இந்த தொடரில் எல்லோருடன் சேர்ந்து பயணித்தது மகிழ்ச்சி. படக்குழுவின் முழு ஈடுபாடு இல்லாமல் இந்த தொடரை முடித்திருக்க முடியாது. எனக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி.
நடிகை திவ்யா துரைசாமி கூறியதாவது..,
இந்த தொடரில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடரின் இயக்குனர் சிவாகர் உடன் பயணித்தது பெரிய அனுபவமாக இருந்தது. ஜீ5-யில் சுவாரஸ்யமிக்க பல தொடர்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்த தொடரும் இருக்கும். நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தர வேண்டும்.
‘ஃபிங்கர்டிப் சீசன் 2′ தொடர் ஜீ5 தளத்தில் ஜூன் 17, 2022 அன்று வெளியாகிறது.