மாயோன் மலை என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அமானுஷ்யமான கிருஷ்ணார் கோவில் பற்றி ஆய்வு செய்வதற்காக செல்கிறது ஹரீஸ் பேரடி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு. அந்த ஆய்வுக்குழுவில் சிபிராஜ், தன்யா மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவின் நோக்கம் அந்த கோவில் பற்றி செய்வது மட்டுமல்ல அதையும் தாண்டி அக்கோவிலில் புதைந்து கிடக்கும் கோடிக்கணக்கான மதிப்பிலான புதையலை திருடுவதுதான். தொல்லியல் துறையில் மூத்த அதிகாரியான கே.எஸ் ரவிக்குமார் மற்றும் மாயோன் மலை பகுதியை சார்ந்த ராதாரவி ஆகிய இருவரும் சேர்ந்து இந்த திருட்டு முயற்சியை முறியடிக்கப்பார்க்கிறார்கள். இதுதான் மாயோன் படத்தின் கதை.

படத்தின் ஹீரோ என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இசைஞானி இளையராஜாவைத்தான் சொல்ல வேண்டும் பாடல் மற்றும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ’மாயோனே’ பாடல் திரையில் ஒலிக்கும் போது திரையரங்கில் இருப்பவர்கள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போல் இருப்பதே இதற்கு சான்று. கந்தர்வர்கள் இசைக்கும் அந்த பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் ஆன்மீகம் மற்றும் அறிவியலை சரியான விகிதத்தில் கலந்ததுதான். கொஞ்சம் அறிவியல் மிகுதியாக இருந்திருந்தால் ஆன்மீகத்தை கிண்டல் செய்யும் தொனி வந்துவிடும், அதே சமயம் ஆன்மீகம் அதிகரித்திருந்தால் ஆடி வெள்ளி வகையறா படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்கும் ஆனால் இரண்டு பக்கத்தையும் தெளிவாக காட்டி இரண்டு தரப்புக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குனர் கிஷோர்.

க்ராஃபிக்ஸ் காட்சிகளில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். இது போற சிறு குறைகளை பெரிதாக நினைக்காமல், ஒரு மிகச்சிறந்த ஆன்மீக அட்வெஞ்சர் ட்ரிப் போக வேண்டும் என்றால் நிச்சயமாக மாயோன் படத்துக்குச் செல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசித்து பார்க்கும் வகையில் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான அருண் மொழி வர்மன் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

மயோன் ஆன்மீக அட்வெஞ்சர் ட்ரிப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here