குஷ்பு தயாரிப்பில், பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி, ஜெய், ஹனிரோஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பட்டாம்பூச்சி. தொடர்ந்து நகைச்சுவை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சுந்தர் சி சமீபகாலமாக பேய் படங்கள் பக்கம் பார்வையை செலுத்தி இருந்தார். தற்போது த்ரில்லர் ஜேனர் நோக்கி திரும்பி இருக்கிறார். இந்த ஜேனரும் அவருக்கு நன்றாக கைகொடுத்திருக்கிறது.

சைக்கோ த்ரில்லர் கதைகள் தமிழ் திரையுலகுக்கு புதியதில்லை என்றாலும் மற்ற ஜேனரை காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் பட்டாம் பூச்சி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நல்ல எண்டர்டெயிமெண்ட் படமாக அமைந்திருக்கிறது.

தூக்கு தண்டனை கைதியான ஜெய், பத்திரிக்கையாளர் ஹனிரோஸிடம் சொல்லும் ஒரு தகவல் காவல்துறை வட்டாரத்தையே புரட்டிப் போடுகிறது. ஜெய் சொன்ன தகவல் குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக வருகிறார் சுந்தர்.சி. ஆனால் காவல் துறை நீதித்துறை. பத்திரிக்கைத்துறை என அனைத்து துறைகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு, தான் நினைத்தபடி கொடூர கொலைகளை செய்கிறார் ஜெய். கொடூர சைக்கோ கொலைகாரனான ஜெய் மற்றும் காவல்துறை அதிகாரியான சுந்தர் சி இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் பட்டாம் பூச்சி.

ஜெய்க்கு இது ஒரு முற்றிலும் புதிய கதாபாத்திரம், சைக்கோ கொலைகாரனாக, வித்தியாசமான ஒரு நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவராக, கொடூர வில்லனாக மிரட்டி இருக்கிறார். அமைதியான ஆர்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சுந்தர் சி. இவர்கள் இருவருக்கும் இணையான ஒரு கதாபாத்திரத்தில் ஹனி ரோஸ். இம்மூவரும் படத்தை தாங்கிப்பிடிக்கிறார்கள்.

80களில் நடக்கும் கதக்களம் என்பனை உணர்ந்து சிறப்பாக பணியாற்றி இருகிறார்கள் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி மற்றும் கலை இயக்குனர் பிரேம் குமார். நவீன் சுந்தரின் இசை மற்றும் பென்னியின் எடிட்டிங் சிறப்பு.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே குறைவாக இருப்பது படத்துக்கு ஒரு சிறு குறையாக இருக்கிறது. மற்றபடி நம்மை சீட் நுனிக்கு கொண்டு வரும் படியான கதைதான் பட்டாம் பூச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here