நடிகரும்
ஜாகுவார் தங்கத்தின்
மாமனாருமான
டி.எஸ். ராஜா காலமானார்.

நடிகரும் , சண்டைக் கலைஞரும், எம்.ஜி.ஆர். நகர் தி.மு.கவின் முன்னாள் வட்ட செயலாளருமான டி. எஸ்.ராஜா (வயது 88) உடல்நல குறைவால் இன்று காலை காலமானார்.

டி.எஸ். ராஜா பற்றிய குறிப்பு :- இவர்,காலம் சென்ற எம்.ஜி.ஆர்.அவர்களிடம் நீண்ட காலம் உடனிருந்தவர்.

கமல் , ரஜினி, விஜய், படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவர்.

என்.டி.ஆர். , அமிதாப், ஜித்தேந்திரா, தர்மேந்திரா, பிரான். ரஞ்சித் ஆகியோருக்கு டூப் கலைஞராகவும் நடித்தவர்.

கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் அன்பு பாராட்டியவர்.

சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரின் 113வது வட்ட தி.மு.க.செயலாளராகவும் இருந்தவர்.

ஸ்டண்ட் யூனியன் துவக்குவதற்கு முனைப்பாக செயல்பட்டவர்.

ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியன் துவக்கிய முன்னோடிகளில் இவர் முதன்மையாக செயல்பட்டவர்.

அதிக திரைப்படங்களில் நடித்தவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 32 வருடங்கள் செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் ( பெப்சி) செயலாளராகவும் இருந்தவர்.

நடிகரும், தயாரிப்பாளரும், கில்டு தலைவருமான ஜாகுவார் தங்கத்தின் மாமனரான இவரது இறுதி சடங்கு இன்று (30.6.2022 வியாழன்) மாலை 4 மணிக்கு
எண்:- 67,
அழகிரி தெரு
எம்.ஜி.ஆர்.நகர்
சென்னை 600078ல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. பின்னர்
நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here