சாமி, சிங்கம், ஆறு என பல வெற்றிகளை கொடுத்த ஹரி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் யானை. முதல் முறையாக ஹரி இயக்கத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். தன்னுடைய வழக்கத்தின் படி மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் ஹரி. ப்ரியா பவானி சங்கர், அம்மு அபிராமி, சமுத்திர கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், ராதிகா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் பிவிஆர் என்ற மிகப்பெரிய தொழில் குழுமத்துக்கு சொந்தக்காரர் ராஜேஸ்.அவருடைய முதல் மனைவியின் மகன்கள் சமுத்திர கனி, போஸ் வெங்கட் மற்றும் சஞ்சீவ். இரண்டாவது மனைவியின் மகன் அருண் விஜய். மூத்தவர்கள் மூவருக்கும் அருண் விஜய் மேல் மாற்றாந்தாய் பிள்ளை என்ற வெறுப்பு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் அருண் விஜய்க்கு இம்மூவர் மீது மாறாத பாசம். ஆனால் குடும்பத்தில் ஏற்படும் ஒரு சிக்கலுக்கு காரணம் அருண் விஜய்தான் என்று பழி சுமத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள் அண்ணன்கள் மூவரும். இந்நிலையில் பிவிஆர் குழுமத்துக்கு எதிரியான ராமச்சந்திர ராஜுவால் அக்குடும்பம் சந்திக்கும் இன்னல்கள், அந்த சிக்கலான சூழ் நிலயில் அருண் விஜய் எப்படி தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதே கதை.

ஹரியின் படங்களில் தொய்வு என்பதே இருக்காது, முழுப்படமும் பரபரப்பாக இருக்கும் என்பதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல. படம் தொடங்கியது முதல் முடியும் வரை நம்மை கட்டிப்போடுகிறார் ஹரி. இதுவே ஹரியின் வெற்றி ஃபார்முலா. இந்த ஃபார்முலா இப்படத்திலும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. கதாபாத்திர படைப்பு, திரைக்கதை என அனைத்தும் சிறப்பாக உள்ளது.குறிப்பாக வில்லன் ராமச்சந்திர ராஜுவ்ன் காதாபாத்திரத்தில் உள்ள ட்விஸ்ட் எதிர்பாராதது.

ஜிவி பிரகாஷின் இசை படத்துக்கு மிகவும் உதவியுள்ளது ‘சண்டாளியே’ பாடல் தாளம் போட வைக்கிறது. ஹரி என்ன எதிர்பார்ப்பார் என்று ஒளிப்பதிவாளருக்கும், படத்தொகுப்பாளருக்கும் நன்றாகவே தெரியும் அதை உணர்ந்து பரபரப்பாக பணியாற்றியுள்ளனர்.

முழு நீள ஆக்சன் அதிரடி மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது யானை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here