தந்தையை இழந்த,,,,, தாயின் அரவணைப்பில் வளர்ந்த நிவேதிதாவும் ,ரெஜினாவும் உடன் பிறந்த சகோதரிகள் .
தமிழ் நாடு அரசு கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் ரெஜினாவை பிரிந்து தனியாக ஒரு குடியிருப்பில் வாடகைக்கு நிவேதிதா செல்லும் நிலையில் ,,, அவர் இருக்கும் இடத்தில் அனுமாஷ்ய சக்தியின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கிறது .
இதனை உணரும் நிவேதிதா பேயும் இல்லை பிசாசும் இல்லை என சொல்லி கொண்டே மன தைரியத்துடன் குடியிருக்கும் வீட்டில் பயமில்லாமல் தனிமையில் வாழ்கிறார் .
இந்நேரத்தில் ‘அன்யாஸ்’ டுடோரியல் என்ற பெயரில் தன்னை பற்றிய ஒவ்வொரு பதிவையும் தினமும் சமூக வலை பக்கங்களில் பரபரப்பாக பதிவு செய்வதை ரெஜினாவுக்கு பிடிக்காமல் போக ,,,,ஒரு நேரத்தில் நிவேதிதா ஒப்பனை செய்து கொண்டு தன் அழகை வர்ணித்து நேரடி தொடர்பில் வலை பக்கத்தில் இருக்கும்போது அவருக்கு பின்னால் பேய் போல மர்ம உருவம்
இருப்பதை தொடர்பில் இருப்பவர்கள் பார்க்கின்றனர் .
அவருடன் இருக்கும் பேய் உருவத்தால் வலை பக்கத்தில் நிவேதிதாவை பின் தொடருபவர்கள் அதிகரித்துக்கொண்டே போக,,,,, நாளைடைவில் நிவேதிதாவின் ‘அன்யாஸ்’ டுடோரியல் வலை பக்கம் பேயினால் மிக பிரபலமாகிறது .
‘அன்யாஸ்’ டுடோரியல் பிரபலமானதால் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் சிலர் தரமான தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த நிவேதிதாவுக்கு பணம் கொடுக்கிறார்கள்.
நிவேதிதாஅமானுஷ்ய சக்தியின் நடவடிக்கைகளை அனுபவிக்க ஆரம்பிக்கும்போதே,, என் சகோதரியை பற்றி எனக்கு நன்றாக தெரியும் சின்ன வயதில் இருந்தே பேய், பிசாசு நம்பிக்கை கிடையாது அவள் செய்வதெல்லாம் குப்பை என ரெஜினா சொல்ல ,,,,,,,நிவேதிதாவை கேவலமாக பேசிய ரெஜினாவின் பேச்சால் ,,,,அன்யாஸ் டுடோரியல் வலை பக்கத்தை பின்தொடர்பவர்களை இழக்கின்றாள் நிவேதிதா.
இதனால் வலை பக்கத்தில் மற்றொரு நேரடி தொடர்பில் தன் மூத்த சகோதரியான ரெஜினா நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது பயப்படும் சூழ்நிலையில் அவளது அதட்டலான அடக்கு முறையில் வாழ்ந்துள்ளேன் . அவளோடு வாழ்வதை விட இந்த பேயுடனே நிம்மதியாக வாழ்ந்து விடலாம் என சொல்கிறாள் .
இறுதியில் நிவேதிதா வாழும் வீட்டில் உண்மையாக பேயின் நடமாட்டம் உள்ளதா?
என்ன பிரச்சனையால் குடும்பத்தை பிரிந்து நிவேதிதா தனிமையில் வாழ்கிறார் ?
சிறு வயதில் பயந்த பெண்ணாக வாழ்ந்த நிவேதிதா பின்னாளில் மன தைரியம் கொண்ட பெண்ணாக மாறியதன் அர்த்தம் என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் திகில் தொடர்தான் ‘அன்யாஸ் டுடோரியல்’
ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ் இருவரும் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உணர்ச்சிமயமான முக பாவனைகள் , தனிமையில் எதற்கும் பயப்படாமல் வாழும் ஒரு பெண்ணின் உடல் மொழி என அமைதியான நடிப்பில் தொடர் முழுவதும் லாவண்யா என்ற கதாபாத்திரமாகவே வாழ்கிறார் நிவேதிதா சதீஷ் .
ரெஜினா கசாண்ட்ரா கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பு .
தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாட்சி பாஸ்கரலா, நந்திதா , திவ்யா மற்றும் பிரமோதினி பம்மி, என நடிப்பில் அனைவரது பங்களிப்பும் சிறப்பு .
ஒளிப்பதிவாளர் விஜய் கே சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு காட்சிகளில் திகில் படத்திற்கு உண்டான மிரட்டல் .
அரோல் கொரெல்லியின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் !
குடும்ப பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வாழும் ஒரு பெண்
வாழும் வீட்டில் அனுமாஷ்ய சக்தியின் நடவடிக்கைகளை பயமில்லாமல் தைரியமாக மேற்கொள்வது என திகில் பயம் கலந்த இந்த தொடரில் பேய் படத்திற்குண்டான எந்த வித இரைச்சல் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் படி ஆங்கில பட பாணியில் இத் தொடரை இயக்கியுள்ளார் இயக்குனர் பல்லவி கங்கிரெட்டி.
‘அன்யாஸ் டுடோரியல்’ புதிய யுக்தியில் எடுக்கப்பட்ட திகில் தொடர் !